ஜனாதிபதி தேர்தலில் பிரதமர், அமித்ஷா வாக்களித்தனர்

Facebook Cover V02

president-election-prime-minister-amit-shah-votesஉலகிலேயே மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க் கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இருவரும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.

amit-shah._L_styvpfஇந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். அவரை தொடர்ந்து, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவும் வாக்களித்தார்.

இதேபோல், அனைத்து மாநிலங்களில் உள்ள சட்டசபை வளாகங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் அனைத்து மாநில முதல்வர்கள் மட்டுமின்றி, எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் என அனைவரும் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர்.

Share This Post

Post Comment