இராணுவத்தினரின் வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு!

Thermo-Care-Heating

gun4445நீர்கொழும்பில் விசேட அதிரடிப்படையினரின் வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

அதிரடிப் படையினர் பயணித்த ஜீப் வண்டி குரண பிரதேசத்தைக் கடந்து செல்ல முற்பட்ட நிலையில் வான் ஒன்றில் வந்த இனம்தெரியாத நபர்கள் அதிரடிப்படை வாகனம் மீது திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் தெரியாத நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணையை இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ideal-image

Share This Post

Post Comment