இராணுவ உயரதிகாரிகள் பயணம் செய்துகொண்டிருந்த வாகனம் தீப்பற்றி எரிந்துநாசம்!

Facebook Cover V02

DI-P10-10-02-(R)-pdc.qxd

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள் பயணம் செய்த வாகனம் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கொட்டாவ வெளியேற்றப் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றது.

மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாமில் இருந்து, பனாகொட இராணுவத் தளத்துக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டது.

இதில் மூன்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் பயணம் செய்தனர் எனவும், வாகனம் தீப்பிடிக்க ஆரம்பித்ததும் அவர்கள் வாகனத்திலிருந்து குதித்து தப்பிவிட்டனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Post

Post Comment