விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வைரமுத்து ஈழத் தமிழர்கள் குறித்து பெருமிதம்

ekuruvi-aiya8-X3

vairamuthuதற்கொலை எண்ணத்தை தடுக்கும் நோக்குடன் எழுதப்பட்ட தனது பாடலுக்கு விருது கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

ஏழாவது முறையாக இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் விருது பெற பரிந்துரைக்கப்பட்டுள்ள கவிஞர் வைரமுத்து பி.பி.சிக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலுள்ள 22 தேசிய மொழிகளில் திரைப்பாடலை பொறுத்த வரை தமிழ் மொழியே முன்னிற்கின்றமை பெருமையளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தர்மதுரை படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு இந்த விருதுக்கு கவிஞர் வைரமுத்து பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஈழத் தமிழர்கள் தமிழ் மொழியை பாதுகாத்துக் கொள்வதற்காக பாரிய பிரியத்தனங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், இந்தியர்கள் தமது தாய்மொழியை பாதுகாக்க தவறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Post

Post Comment