வட்டுவாகல் மக்களின் நிலமீட்புப் போராட்டம் தொடர்கிறது!

ekuruvi-aiya8-X3

vadduமுல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்காலை அண்டிய வட்டுவாகல் பகுதியில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்கக்கோரி தொடர் போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது.

நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தாயகத்தில் பரவலாக நடைபெறுகின்ற போராட்டத்தின் தொடராக வட்டுவாகல் பகுதியிலும் நேற்று போராட்டம் மக்களால் தொடங்கியுள்ளது.

வட்டுவாகல் ஏ-35 நெடுஞ்சாலைக்கு சமீபமாக காணப்படுகின்ற 640 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பினை கடற்படையினர் கையகப்படுத்திவைத்திருக்கின்றனர்.

அந்தக் காணிகளை விடுவிக்கக்கோரி கிராமத்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு, மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் உட்பட்ட பகுதிகளிலும் போராட்டங்கள் தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment