இன்று வடமாகாணத்தில் சகல சேவைகளும் முடக்கம்!

harthal-in-north--2பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று வடமாகாணத்தில் பூரண கர்த்தால் அனுட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றைய நாள் காலை 9.30 மணியளவில் 19சமூக அமைப்புக்கள் இணைந்து இன்று ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

நாளையதினம் யாழ். இந்துக்கல்லூரியில் நடைபெற வுள்ள தமிழ்தின விழாவுக்கு சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளநிலையில் அவரது வருகைக்கும் எதிர்ப்புத்தெரிவிக்கப்பட்டு இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், வவுனியாவில் நடைபெற்று வந்த மூன்று அரசியல் கைதிகளின் வழக்கு அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், குறித்த மூவரும் 19 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தொடர்பிலும் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்று, அத்தியாவசிய போக்குவரத்துச் சேவையைத் தவிர அனைத்துச் சேவைகளும் வடமாகாணத்தில் முடங்கியுள்ளது.

harthal-in-north--4 harthal-in-north--3 harthal-in-north--1


Related News

 • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
 • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
 • கட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்
 • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
 • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
 • நம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே
 • இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது
 • பரந்த கூட்டணியொன்றை உருவாக்கி களமிறங்குவோம் – நாமல்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *