வடகொரியாவுக்கு எதிரான ஐ.நா.-வின் அறிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் ரஷ்யா

ekuruvi-aiya8-X3

Russia-blocks-UN-statement-calling-for-N-Korea-sanctionsவடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று கூடியது. இதில் வடகொரியாவுக்கு புதிய பொருளாதார தடைகள் மற்றும் வடகொரியா மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அமெரிக்கா முன்வைத்தது.

15 நாடுகள் பங்கேற்ற இந்த கூட்டுக்குழுவில் அமெரிக்கா சார்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கைக்கு சில நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் இந்த கோரிக்கை குறித்து பொதுக்குழுவில் நடந்த விவாதத்தின் போது, வடகொரியாவின் இத்தகைய செயலுக்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஐ.நா. தெரிவித்தது.

ஐ.நா.வின் இந்த அறிவிப்புக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன், அதனை செயல்படுத்த தடையாக இருந்து வருகிறது. வடகொரியா மீதான இந்த தடைகள் மேலும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று ஐ.நா. கூட்டத்தில் பேசிய ரஷ்யாவின் துணை தூதர் விளாடிமிர் சாஃப்ரான்கோவ் கூறுகையில், வடகொரியா மீதான புதிய பொருளாதார தடையை எதிர்ப்பதாக கூறியிருந்தார். மேலும், வடகொரியா மீதான ராணுவ நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என்று கூறினார். நாம் வெறுமனே ஒரு முட்டுக்கட்டையை நோக்கி விரைகிறோம். வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு ராணுவ நடவடிக்கைகளும் தீர்வாக அமையாது. எனவே ரஷ்யா அதனை ஏற்காது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment