வடக்கு மாகாண ஆளுநரின் செயற்பாட்டுக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கண்டனம்!

viknesharanவடக்கு ஆளுநர் மாகாணத்தின் நிர்வாக அதிகாரங்களில் தன்னிச்சையாக நடவடிக்கைகளை எடுத்துவருகின்றார் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை, யாழ்ப்பாண நகரத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடலொன்று ஆளுநரின் எண்ணப்படி அவரது அலுவலத்தில் நடந்து முடிந்துள்ளதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம்சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த செவ்வாய்க்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் யாழ்ப்பாண நகர அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தினை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உட்பட அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் புறக்கணித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த மாவை சேனாதிராசா, எம்.ஏ சுமந்திரன், ஈ. சரவணபவன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள கொழும்பிலிருந்து வருகைதந்து கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் தமது ஒத்துழைப்பு இன்றி நேற்றைய கலந்துரையாடலை நடத்தியது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து ஆளுநருக்குத் தெரியப்படுத்திபோது, கலந்துரையாடலில் பங்கேற்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சரவணபவன் ஆகியோர் கொழும்பிலிருந்து வருகின்றனர் எனக் கூறியதுடன், தமக்கு உதவியாகவே அவர்கள் அழைக்கப்பட்டனர் எனவும் கூறியதாகத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு உதவுவதாகக் கூறி உபத்திரவம் தராமல் இருந்தால்போதும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்மூடாகவே பேச முன்வரவேண்டுமெனவும் தெரிவித்த முதலமைச்சர் ஆளுநர் ஊடாக பேசவேண்டிய அவசியம் இல்லையெனவும் தெரிவித்தார்.

மேலும், அவர்களைத் தான் எம்மவர்கள் என்றுதான் இப்போதும் கருதுவதாகவும், யாழ் நகர அபிவிருத்தி தொடர்பில் வடக்கு மாகாணசபை சம்பந்தப்பட்ட அனைவருடனும் கடந்த வருடத்திலிருந்து கலந்துரையாடி வருவதாகவும் அவற்றின் பெறுபேறுகளை அறியாது, வடக்கு ஆளுநர் தன்னிச்சையாக கூட்டமொன்றை நடாத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Related News

 • எந்தவொரு சூழ்நிலையிலும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதில்லை
 • ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்
 • ராஜபக்சேவுக்கு பெரும் தோல்வி – நாடாளுமன்றத்தில் கடும் அமளி
 • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
 • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
 • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
 • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
 • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *