வடக்கு பரிஸில் 400 முகாம்களை அமைத்தது பிரான்ஸ் அரசாங்கம்

pariceபரிஸின் கலே பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட பல குடியேற்றவாசிகளுக்கு உதவும் கையில், வடக்கு பரிஸில் சுமார் 400 முகாம்களை பிரான்ஸ் அரசாங்கம் திறந்து வைத்துள்ளது.

குறித்த முகாம்கள் நேற்று (வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாக திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் தனி நபர் ஒருவர் தங்குவதற்கு ஏற்ற வகையில் Gare du Nord எனும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த முகாம்களில் இருப்பிடம் வழங்கும் வகையில் நாளொன்றுக்கு 50 தொடக்கம் 80 குடியேற்றவாசிகள் உற்வாங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில், பெண்கள் மற்றும் குடும்பங்கள் தங்கக்கூடிய வகையில் முகாம்கள் அமைத்துக் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் முற்றாக அழிக்கப்பட்ட கலே பகுதி முகாம்களில் சுமார் 7000 குடியேற்றவாசிகள் வாழ்ந்து வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த முகாம்களில் ஆப்கானிஸ்தான், எரித்ரியா மற்றும் சூடானில் இருந்து வந்த சுமார் 1200 சிறுவர்கள் வாழ்ந்து வந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

Share This Post

Post Comment