வடக்கு கிழக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னம் அமைதிக்கு உகந்ததல்ல-கலாநிதி ஜெஹான் பெரேரா

sdsd

Jehan-Perera-222x300வடக்கு கிழக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னம் அமைதிக்கு உகந்ததல்ல என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

தேசிய சமாதானத்திற்காக சமாதானம் மற்றும் சர்வ இன நல்லிணக்கத்திற்கான சர்வமத சமூகங்களிடையே ஒருமைப்பாட்டை வலுவூட்டும் அமர்வு இன்று மட்டக்களப்பு கீறீன் கார்டன் விடுதியில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினர் இன்னமும் வடக்கு கிழக்கு வாழ் மக்களது வாழ்விடங்களில் நிலைகொண்டிருப்பதால் அமைதிக்கான சூழ்நிலை அச்சத்துடன் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பபட்டிருந்தாலும், நாடு எப்படி ஆளப்பட வேண்டும் என்று எந்த ஒப்பந்தங்களும் இல்லை எனவும் இதுவொரு துரதிஷ்ட நிலைமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 60 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் தேசிய சமாதானத்தையும் இன ஐக்கியத்தையும் உருவாக்குவதற்கும் மிகச் சிறந்த கால கட்டம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து விட்ட நிலையில், ஆயுதக் குழுக்கள் இல்லை. ஆகவே இதைவிட சிறந்த கால கட்டம் இருக்கவே முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலத்தில் ஆட்சியாளர்களும் எதிர்க்கட்சியும் எதிரும் புதிருமாகவே பணியாற்றி வந்ததாகவும் அந்த நிலைமை தற்போது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், வெள்ளை வான் பீதி உட்பட வாழ்வதற்கு அச்சம் தரும் அனைத்து அநியாய நடவடிக்கைகளும் மாற்றம் கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இன்னமும் தாமதம் இருந்து வருவதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்காவின் நல்லிணக்கத்திற்கு மத மற்றும் சமூகத் தலைவர்களின் பங்கு முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர்,

சமூக ஒற்றுமை, சகோதரத்துவம், கருணை, பொறுமை, அன்பு, அஹிம்சை போன்ற குணாம்சங்கள் சகோதரத்துவ மத போதனைகள் மூலம் சமூக இணக்கப்பாட்டிற்குப் பாரிய பங்களிப்புக்களைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

Share This Post

Post Comment