வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் மதகு வைத்த குளத்தில்!

ekuruvi-aiya8-X3

porulatharaவடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு மதகு வைத்த குளம் பகுதி நிலத்தினை வழங்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து விடுவிப்பதற்கான அனுமதிப்பத்திரம் கடந்த வாரம் மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தெரியவருவதாவது,

வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான இடத் தெரிவு நடைபெற்ற வேளையில் பல இடங்கள் தெரிவுசெய்யப்பட்டு, பொருளாதார மத்திய நிலையம் சிங்கள இடத்திற்கு மாற்றப்படவிருக்கும் வேளையிலும், இறுதியில் மதகு வைத்த குளம் தெரிவுசெய்யப்பட்டது.

இப்பிரதேசமும், நீண்டகால குத்தகை அடிப்படையில், தேசிய வீடமைப்பு அதிகார சபையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை இரத்துச்செய்து வழங்கும் அமைச்சரவை அனுமதியும் கோரப்பட்டுள்ளது.

இவ்வாறு கோரப்பட்டதற்கமையவே, குறித்த விடயம் தொடர்பாக அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டு மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment