வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்தித்தார் வடக்கின் கட்டளைத் தளபதி!

sdsd

army-com-720x450யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக கடமையேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனை சிநேகபூர்வமாக சந்தித்து பேசியுள்ளார்.

யாழ்.கோவில் வீதியில் உள்ள வடக்கு மாகாண முதலமைச்சரின் இல்லத்தில் நேற்றய தினம் முதலமைச்சரை அவர் சந்தித்துள்ளார். இச்சந்திப்புக் குறித்து முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“கட்டளைத் தளபதியுடன் சந்திப்பு பல நல்ல விடயங்கள் தொடர்பாக பேச வைத்திருக்கின்றது. இங்குள்ள பிரதானமான பிரச்சினைகளை அவர் அறிந்துள்ளார். இங்குள்ள இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் காணிகளில் மீள்குடியேற்றுவது தனது பிரதான கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தான் 1990ம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கில் கடமையாற்றியபோது இங்கிருந்த நிலமைகளுக்கும் இப்போதுள்ள நிலமைகளுக்கும் வித்தியாசம் உள்ளதாக கூறியதுடன், மீள்குடியேற்றத்திற்கு தகுந்த நடவடிக்கைகள் தாமதமானாலும் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்”.

Share This Post

Post Comment