வடக்கில் இடம்பெறும் புத்தர் சிலை அமைப்பு,சட்டவிரோத குடியேற்றம் தொடர்பில் விரைவில் நடவடிக்கையாம்! ரணில்

ekuruvi-aiya8-X3

ranil455வடக்கில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் புத்தர் சிலை கள் அமைக்கப்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும்,இது தொடர்பில் துரித மான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட ப்பட்டு ள்ளது.
எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (சனிக்கி ழமை) இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது, வடக்கின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக, கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

‘தமிழ் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்களுக்கான தகுதி பெற்றிருந்தும் அவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படாதுள்ளது. வடக்கு கிழக்கில் இன ரீதியான பதற்றங்களை உருவாக்கும் நோக்கில் இடம்பெறும் நடவடிக்கை கள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளது.
சிங்கள மக்கள் வடக்கிலே மீளக் குடியேறுவதையும் அங்கே தமது மதத்தினையும் கலாச்சாரத்தினையும் பின்பற்றுவதையும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்கின்றது.

எனினும், வேண்டுமென்றே இன ரீதியான பதற்றத்தை தூண்டும் விதத்திலும், வடக்கு கிழக்கில் சனத்தொகை பரம்பலில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கி லும் செய்யப்படும் எந்த செயலும், இலங்கையில் மக்களிடையே நல்லிணக்க த்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு குந்தகமாக அமைவதோடு, இவ்வாறான செயற்பாடுகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது வன்மையாக கண்டிப்ப தாகவும் பிரதமர் ரணில் விக்கிரமங்கவிடம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் பிரதமர் உறுதியளித்துள்ளார்’ என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment