உதயநிதியின் `இப்படை வெல்லும்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Thermo-Care-Heating

Udhayanidhis-Ippadai-Vellumலைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `இப்படை வெல்லும்’.

இப்படத்தை ‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ படங்களை இயக்கிய கவுரவ் நாராயணன் இயக்கியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் சூரி, ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையில் பாடல்களும், டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

வருகிற நவம்பர் 9-ஆம் தேதி படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி பின்னணி வருனணை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ideal-image

Share This Post

Post Comment