தமிழ்த் தேசிய பேரவை உருவாக்கம்!

Thermo-Care-Heating

tnfஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழ்த் தேசியமக்கள் முன்னணி தமிழர் சம உரிமை இயக்கம் மற்றும் பொது அமைப்புக்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுள்ளன.

குறித்த உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னுரை

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் வேணவாவை வென்றெடுப்பதையும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி காண்பதையும் இலக்காகக் கொண்டு தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் வரைபினை தேசியக் கொள்கையாக முன்னிறுத்தி மேற்குறிப்பிட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து இதயசுத்தியுடன் செயற்படும் ஓர் அரசியற் பேரியக்கமாக இவ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

1. பெயர் : தமிழ்த் தேசியப் பேரவை -த.தே.பே. .(TamilNational Council–T.N.C.)

2. இலக்கு: மேற்குறிப்பிட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் பேரவையினால் 10.04.2016 ஆந் திகதிவெளியிடப்பட்ட தீர்வுத்திட்டத்தை வென்றெடுப்பதையும், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முழுமையான நீதியைபெற்றுக் கொள்வதையும் இலக்காக கொண்டு இவ் அரசியற் பேரியக்கம் (தமிழ்த்தேசியப் பேரவை) செயற்படும்.

3. எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் பொதுச்சின்னத்தை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளமையினால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும்

4. எதிர்காலத்தில் தமிழ்த்தேசியப் பேரவை (TamilNational Council–T.N.C.) எனும் பெயரில் இக்கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட்டு புதிய சின்னம் பெறப்பட்டு மேற்படி இலக்கை அடைவதற்காக செயற்படும்.

5. இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பொதுஅமைப்புக்கள் தமது சுயாதீனத்தை பேணிக்கொள்ளமுடியும்.

மேற்படிவிடயங்களை வாசித்து விளங்கிக்கொண்டு அதனை ஏற்று 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06ஆம் நாள் (06.12.2017) இப்புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்குறிப்பிட்ட  அமைப்புக்களால் கைச்சாத்திடப்பட்டது.

ideal-image

Share This Post

Post Comment