தனுஷ் அக்காவின் உருக்கமான பதிவு

Pls-live-and-LET-LIVE-Dhanush-sister-Geetha-Emotional-wordsதனுஷின் அக்கா கீதா சமூக வலைத்தளத்தில் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து தனுஷை பற்றியும் அவரது லீலைகளை பற்றியும் நிறைய பதிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தனுஷ் சில நடிகைகளுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தனுஷின் அக்காவும், பிரபல பல் மருத்துவருமான கீதா தனது சமூக வலைத்தளத்தில் இந்த பிரச்சினை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறும்போது, கடந்த சில மாதங்களாக நடைபெறும் பல்வேறு விஷயங்களால் எங்கள் குடும்பம் மிகவும் நொந்து போயுள்ளது. இருந்தாலும், நாங்கள் அனைவரும் மிகவும் அமைதியாகவே உள்ளோம். நாங்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒரேயொரு நபர் தனது கடின உழைப்பும், தியாகம் செய்து எங்களுக்கு உணவு, கல்வி கொடுத்தார். அதனால், நாங்கள் இன்று நன்றாக உள்ளோம்.

C24A61C0-F2E0-457C-89D0-AC73AD37E82D_L_styvpf.gifதேனியில் ஒரு சிறு கிராமத்தில் இருந்து வந்து இன்று இந்த நிலைமைக்கு உயர்ந்திருக்கிறோம். இது ஒன்றும் ஒருநாள் இரவில் நடந்துவிடவில்லை. இந்த நிலைமையை அடைய என்னுடைய சகோதரர்கள் (தனுஷ், செல்வராகவன்) கடும் விமர்சனங்கள், அவமானங்களை சந்தித்துள்ளனர்.

தனுஷ் இன்று பெரிய நடிகர் என்றால், அது அவருடைய கடினமான உழைப்பாலேயே சாத்தியமானது. டுவிட்டரில் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்ற நிலைமை உருவாகிவிட்டது. 12 வயது சிறுவர்கள்கூட டுவிட்டர் கணக்கு வைத்துள்ள நிலையில், இதில் ஆபாச வீடியோக்களை வெளியிடுவது வருத்தம் தருகிறது.

403093A5-6BA9-41F2-B75E-D4FB1D8BA015_L_styvpf.gifசிலர் அந்த ஆபாச காணொளிகளை வெளியிடுமாறு கேட்பது இன்னும் மோசமான ஒன்று. எங்கள் குடும்பம் நிறைய பிரச்சினைகளை சந்தித்துவிட்டது. எது நடந்தாலும் ஒன்றாகவே இருந்து போராடுவோம். நான் மிகுந்த வலியுடனும், மன வருத்தத்துடனும் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் இருந்து சில காலம் வெளியேறுகிறேன்.

யாரையும் பார்க்கவோ, பேசவோ முடியாத நிலையில் இருக்கிறேன். இதை யார் செய்தாலும் உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். அது யாருடைய உயிரையாவது மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டால், அவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரமுடியாது. வாழுங்கள், தயவு செய்து வாழ விடுங்கள். இவ்வாறு டாக்டர் விமலா குறிப்பிட்டுள்ளா


Related News

 • வைரமுத்து மீதான புகாருக்கு என்ன காரணம்? – பாடகி சின்மயி
 • உலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்
 • ஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை என்கிறார் சமந்தா
 • ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் – விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
 • கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
 • சீதக்காதி சென்சார் வெளியீடு – நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டம்
 • ஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
 • 96, ராட்சசன் படக்குழுவை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *