கனடாவில் திரையிடப்படும் உரு

இரண்டாயிரம்  ஆண்டுகளின்  தொடக்கத்தில்   சினிமாசார் தன்னார்வ  தொண்டு நிறுவங்களின்  ஊடாக இலங்கையில்  தமிழ் சினிமாவை  ஆக்கப்பூர்வமாக மீள  செயற்படுத்த  முயன்ற  காசிநாதர்  ஞானதாஸ் நீண்ட இடைவெளிக்கு  பின்  இயக்கி  சர்வதேச  மட்டத்தில்  அங்கீகரிக்க பட்ட  உரு  திரைப்படம்  இம்மாதம்  13ம் திகதி  மதியம் 1 மணி  மற்றும் 3மணி  காட்சிகளாக  Woodside திரையரங்கில் திரையிடப்படுகிறது. இயக்குனர்  ஞானதாஸின்  கனடா  வருகையை  ஒட்டிய இத்திரையிடல்  உரு  படைப்பு  பற்றிய  தேடலையும் அது கனேடிய திரைத்துறைக்கு  சொல்லும்  சேதி  என்ன  என்பது  குறித்தும் ஆராய தூண்டுகிறது.
காணாமல்  போனவர்களுக்கான  காத்திருப்பு  என்கிற  உணர்வழுத்தம்  மிக்க  கருப்பொருளை  மிக  எளிமையான  காட்சி அமைப்புகள்  மூலம்   நகர்த்த  முயன்றமை  பார்வையாளர்களை  உடனடியாகவே  கதையோட்டத்துடன்  பயணப்பட  உதவுகின்றது. கதையோட்டத்துக்கான  திறவுகோலாக  நடு  இரவில்  சிந்தனை  சாகரத்தில்  சிக்கி  அல்லாடும்   ஒரு  தாய் சார்ந்த   மென்மையான  உணர்வுகள்  தெரிவு செய்யப்பட்டமை  இதற்கு  இன்னொரு காரணமாகலாம். மேலும்  உரு  அல்லது  கலையாடுதல்  எனும்  கிராமிய பண்பாட்டின்  ஊடாக  தொடர்ந்து ஏமாற்றப்படும் ஒரு  இனத்தின் உணர்வு  வெளிப்பாட்டை  எடுத்தியம்பும்  உத்தி  படைப்புக்கு  கலைசார்  வலு சேர்க்கிறது.  போரின் பின்னதான வலி  மிக்க  வாழ்வியலை  இதயசுத்தியுடனும் எமக்கே  உரித்தான  கலாச்சார  எல்லைகளுக்குள்ளும்  அணுகிய  படைப்பாகவே  உரு  திரைப்படத்தை  பார்க்க  முடிகிறது.
இப்படைப்பு  பல நல்ல  நடிகர்களை  இனம்காட்டுகிறது. குறிப்பாக இரும்பொறை  பாத்திரத்தில்  நடிக்கும் வீரவாகு கதீசன் மிக கனமான  நடிப்பு  வெளிப்பாட்டின்  மூலமாக  எங்கள்  பேச்சு  வழக்கு  மீது  இருந்த  நம்பிக்கையின்மை தகர்த்திருப்பதாகவே  சொல்ல  முடிகிறது. படத்தின்  இன்னுமோர்  வலு  இசை. இசையமைத்திருப்பவர்  மதீசன்  தனபாலசிங்கம்.  படைப்பின்  தன்மை  கருதி  பின்னணி  இசைக்காக   உடுக்கு  போன்ற தோல்  வாத்தியங்களும்  அவ்வப்போது  தேவைப்படும்  இணைப்பு  இசை கோர்வைகளும்  மிக  நேர்த்தியாக   சேர்க்கப்பட்டுள்ளது. இதுவே உருவாடுதலை தத்ரூபமாக  சித்தரிக்க  உதவுகிறது.
கனடாவில்  பொருளாதார  ரீதியாகவும்  தானபரப்பு  ரீதியாகவும்   பல்வேறு மட்டங்களில்   பல படைப்புகள்  வந்திருந்தாலும்  அவை  கதைகளை  வெறும் சம்பாசனை ரீதியாக  நகர்த்த  முயன்ற  அல்லது  சர்ச்சைக்குரிய விடயங்களை நுனிப்புல் மேய்வதன் மூலமாக  பிரபலம் அடைய முயன்ற படைப்புகளாகவுமே தம்மை இனம் காட்டின. இந்நிலையில்  துறை  ரீதியாக  நாம்  பயணிக்க வேண்டிய  ஆரோக்கியமான பாதை   இதுவென  முன்மொழியும்  காசிநாதர்  ஞானதாசின்  உரு  படைப்பை   வழமையான விமர்சன  நோக்குதல்களுக்கு  அப்பால்  ஆதரிக்க  வேண்டியது  எமது  கடமை.
Triden V Balasingamgnanathas-1 42917436_2038730999481356_2331069654245572608_n
42925349_274003936556583_2803954263728848896_n matheesan thanabalasingam veerawagu katheesan

Related News

 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும்
 • நான்கு தமிழர்கள் டொரோண்டோ ,மார்க்கம் கல்விச்சபைகளில் வெற்றி
 • உளுக்கு, சுளுக்கு, வாதம்
 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *