மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும்-சந்திரிக்கா

Facebook Cover V02

chanthirikkaஇலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஆகிய விடயங்களை மையப்படுத்தி நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறும் ஐ.நா.வின் பொது கூட்டத்திலேயே சந்திரிக்கா பண்டாரநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் முடிவடைந்துள்ள போதும் இனங்களிடையே ஒற்றுமை இல்லை. இனங்களுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்த கடந்த அரசாங்கம் தவறிவிட்டது.

ஆனால் தற்போதைய அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக சகல நடவடிக்கைகளையும் செய்து வருகின்றது. இதன் ஒரு பொறிமுறையாகவே எதிர்க் கட்சித் தலைவராக சிறுபான்மை இனத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதில் நாட்டின் இரு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. இதுவொரு முக்கியமான விடயமாகும்.

மேலும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம், சமாதானம், சம உரிமைகளை ஏற்படுத்துவதன் மூலமே நிலையான சமானதானத்தை எட்ட முடியும். மாறாக இராணுவ நடவடிக்கைகள் மூலம் சமாதானத்தை எட்ட முடியாது என்றார்.

Share This Post

Post Comment