காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் கிளிநொச்சியில் கதவடைப்பு!

Facebook Cover V02

42கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி வர்த்தகர்களால் கதவடைப்புடன் கூடிய கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காணமால்போகச் செய்யப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள போராட்டம் தீர்வுகளற்ற நிலையில் இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல்போகச் செய்யப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரியும், காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவொன்றையும் வலியுறுத்தி காணாமலாக்கப்பட்ட உறவுகளினால் இன்று நான்காவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி வர்த்தகர்கள் இன்று கதவடைப்புடன் கூடிய கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டமானது கிளிநொச்சி சந்தைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு காணாமல் போன உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இடமான கந்தசுவாமி ஆலயம் வரை முன்னெடுக்கப்பட்டு அங்கு காணாமலாக்கப்பட்ட உறவுகளுடன் தாமும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

download-21 download-20

Share This Post

Post Comment