காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் நல்லூரில் அடையாள உண்ணாவிரதம்!

Thermo-Care-Heating

nallur-fasting-4வவுனியாவில் இன்று நான்காவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் வடபகுதியில் கைது செய்யப்பட்டு காணாமல்போனாரின் பாதுகாவலர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த அடையாள உண்ணாவிரதம் இடம்பெற்றது.

இன்று காலை தொடக்கம் மாலை வரை நடைபெறும் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை, இன்று இந்தப் போராட்டத்துக்கான ஒழுங்குகள் நடைபெற்று வந்த நிலையில், நல்லூர் ஆலய வீதியில் போராட்டங்கள், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இரவோடு இரவாக அநாமதேய அறிவிப்புப் பலகை ஒன்று நாட்டப்பட்டிருந்தது.

எனினும், நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, நாளை காலை 9 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக, நாளை காலை 9 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் நடத்தப்படவுள்ளது.

nallur-fasting-11 nallur-fasting-3 nallur-fasting-2

ideal-image

Share This Post

Post Comment