கவிஞர் திவ்யராஜனின் கவின் கலாலயா தயாரிப்பில் வெளிவந்த 'உறவு' DVD வெளியீட்டு விழா - மகாகவி பாரதியின் பாடல்கள் 'பேசாப்பொருள்' இறுவட்டு வெளியீடு
Mar 19 2012 23:43:27

தாயகத்தில் வாழ்ந்த காலத்திலேயே கலை இலக்கிய கலைஞர்களின் பங்களிப்பு என்பது அளப்பரியது. அதிலும் மேடை நாடகங்கள், கவியரங்கங்கள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைபடத்துறையில் ஈடுபட்டு தங்கள் கலைத்திறன்களை வெளிக்கொணர்ந்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்று சாதனை புரிந்த எண்ணற்ற கலைஞர்கள் தற்போது கனேடிய மண்ணிலும் தங்கள் ஆற்றல்கள் மூலம் தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்து வருகிறார்கள். அத்தகைய கலைஞர்களின் வரிசையில் கவிஞர் திவ்யராஜன் குடும்பத்தினரை அனைவரும் அறிந்திருக்கக்கூடும். கவிஞராகவும், மேடைக்கலைஞராக பல பட்டமன்றம், உரையரங்கம் ஆகியவற்றில் பங்கேற்றும், முதன் முதல் கவின் கலாலயா என்ற திரைப்பட நிறுவனத்தை உருவாக்கி,  ;சகா' என்ற தனது முதல் திரைப்படத்தை தயாரித்து தமிழ்த்திரைபடத்தில் தடம் பதித்து வெற்றி கண்டவர் திரு திவ்யராஜன்.  அவரது இரண்டாவது தயாரிப்பான 'உறவு' திரைப்படமும் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டு நம்மை மகிழ்வித்துள்ளது.

உறவு திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும்  பாராட்டுதல்களின் பின்னணியில், அதனை நம் உறவுகள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே காண்பதற்காக அதன் னுஏனு  மற்றும் மகாகவி பாரதியாரின் பாடல்கள் கொண்ட ' பேசாப்பொருள்' எனும் இறுவட்டும் கடந்த  10.03.2012 அன்று பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை, தமிழிசைக் கலாமன்ற தலைவரும், பிரபல சட்டத்துறை வல்லுனருமாகிய திரு தம்பைய ஸ்ரீபதி அவர்கள் தலைமையில் ஸ்காபரோ சிவிக் சென்டர் உள்ளரங்கில் இடம் பெற்றது. மேலும்   இந்த இரு திரைப்படங்களின் வெற்றிக்கு பின்னணியாகத் திகழ்ந்த அனைத்துக் கலைஞர்களை கௌரவித்தும், அதே சமயம் திருமதி சிவா திவ்யராஜனின் ஒரு பிரபல நடன ஆசிரியராக தனது கவின் கலாலயா அகாடமி ஆப் பைன் ஆர்ட்ஸ் நடனப்பயிற்சி மையத்தில், இங்குள்ள நமது இளம் பெண்களுக்கு நடனப்பயிற்சி அளித்து வருவதால், அவரிடம் கடந்த ஆண்டு நடனம் பய்pன்ற மாணவர்களின் வயது மற்றும் கிரேட் ஆகியவற்றின் அடிப்படையில் பாhராட்டுச் சான்றிதழ்களும், நினைவுக்கோப்பைகளும் வழங்கும் ஒரு சிறப்பு வைபவம் அரங்கம் நிரம்பிய விதத்தில் கூடியிருந்த பார்வையாளர்கள் அனைவரும் பாராட்டும் விதத்தில் மிகவும் இனிமையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு இங்குள்ள முக்யஸ்தர்களான மகா ஜனக்கல்லூரி முன்னாள் அதிபர் திரு பொ.கனகசபாபதி, கவிநாயகர் திரு கந்தவனம், உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர்.என்.லோகேந்திரலிங்கம், கலாநிதி சு.சிவநாயகமூர்த்தி, ஆசிரியரும் எழுத்தாளர் இணையத்தலைவருமாகிய திரு சிவபாலு, மார்க்கம் நகரசபை உறுப்பினர் திரு லோகன் கணபதி, சிந்தனைப்பூக்கள் பத்மநாதன், கவிதாயினி சுல்பிகா, சட்ட வல்லுனர் திருமதி யசோ சின்னதுரை, வுஏஐ  செய்தி அறிவிப்பாளர் திரு விக்னேஸ்வரன், கவிஞர் சேரன்,  திபை;படத் தயாரிப்பாளர்களான ஸ்வேதா சினி ஆhட்ஸ் அதிபர் திரு பரராஜசிங்கம்,  திரு லெனின் சிவம்,; பண்டிதர் அலெக்ஸாண்டர் போன்றவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கான நினைவுக்கோப்பை,  நினைவுக் கேடயங்கள், அன்று வெளியிடப்பட்ட இறுவட்டு, குறுந்தட்டு போன்றவற்றை வழங்கி பாராட்டிச் சிறப்பித்தார்கள்.
சட்டதரணி திரு கனக மனோகரன், தமிழன் வழிகாட்டி திரு செந்தி, கலகலப்பு தீசன், திரு சாமி ராமச்சந்திரன்

கனேடிய தேசிய கீதம், தமிழ் வாழ்த்து, அமைதி வணக்கத்துடன் அன்றைய வைபவத்தின் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாய திரு திவ்யராஜன் மற்றும் திரு முகந்த முரளி ஆகியோர அவ்வப்போது விழா பிரமுகர்களையும், திரைப்படக்கலைஞர்களையும் அறிமுகப்படுத்தி, நகழ்ச்சியை கொண்டு சென்ற விதம்  மிகவும் கச்சிதமாய் இருந்தது. முதல் நிகழ்வாக கவின் கலாலய நடனக்கேந்திர மாணவர்களுக்கு நினைவுக்கோப்பபை மற்றும் பரிசுகள் விழாவிற்கு வருகை புரிந்திருந்த முக்கிய பிரபலங்களால் வழங்கப்பட்டு, அன்று வெளியிடப்படும் குறுந்தட்டில் உள்ள மகாகவி பாரதியார் 'பேசாப்பொருள்' எனும் பாடலுக்கான நடனத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து இடம் பெற்ற உரைகளுக்கிடையே மேலும் சில பாடல்களும் நடனத்துடன் அரங்கேறின.

தலைமையுரை ஆற்றிய  சட்டத்தரணி திரு தம்பையா ஸ்ரீபதி அவர்கள் மகாகவி பாரதியாரின் பாடல்களில் உள்ள கவித்துவத்தையும், அத்தகைய கவிதைகளில் அனேகர் அறிந்திராதப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அதனை பேச வைக்கும் குறுந்தட்டாக வெளியிட முற்பட்ட திரு திவ்யராஜன் அவர்களை மனதாரப் பாராட்டினார். இக்குறுந்தட்டில் உள்ள 13 பாடல்களுமே அனைவரின் மனதை தொடும் அள்விற்கு மிக ரம்மியமாய் அமைந்துள்ளதோடு, இதுவரை எந்த திரைப்படத்திலும் கூட இந்தப் பாடல்கள் இடம் பெற வில்லை என்பதையும் சுட்டிக்காட்டி, பல்வேறு கோண்ங்களில் மேற்கோள்களுடன் விமர்ச்சித்தார். இந்திய விடுதலைப் போராட்;ட காலத்தில், அங்குள்ள பாமரர்களிடம் கூட  விடுதலைப்போராட்ட எழுச்சியை உண்டாக்கிய அவரது தேசப்பக்திப் பாடல்கள், சக்தி வழிபாட்டில் அவர் கொண்ட ஈடுபாடு போன்றவை உண்மையிலேயே நமது தமிழ் உணர்வுக்கும் தேசிய பற்றிற்கும் மேலும் உரமூட்டியது எனலாம் எனக்கூறி, இந்த குறுந்தட்டினை அனைவரும் வாங்கி கேட்டு இன்புற வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
அடுத்து கவிஞர் சேரன், ஆசிரியர் சிவபாலு ஆகியோர் தங்களது உரையில் கவிதை என்பது வேறு, பாடல்கள் என்பது வேறு என்பதனை விவரித்தும், மக்களாட்சி மலர வேண்டும் என்று வாழ்ந்தவன் பாரதி என்று பல்வேறு உதாரணங்களுடன் சிறப்புரை ஆற்றினார்கள்.

'பேசாப்பொருள்' எனும் குறுந்தட்டினை வெளியிட்டு வாழ்த்துரை உரையாற்றிய உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர்.என்.லோகேந்திரலிங்கம் தனது உரையில் திரு திவ்யராஜனோடு தான் கொண்டுள்ள 19 வருட நட்பும் இலக்கிய தொடர்பும், , அவரின் பல இசை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்துள்ளதையும், அவரின் திரைப்பட முயற்சி தன்னை மிகவும் கவர்ந்தது என்று கூறிப்பிட்டார். பாரதியாரின் இனியத் தமிழ் பாடல்களை அடிக்கடி கேட்டு மகிழும் நமக்கு, இந்த புதியப் பாடலாக தோன்றும் 'பேசாப் பொருள்' நிச்சயம் திவ்யராஜனின் கவி உணர்வுடன் கூடிய நோக்கத்தை பூரணத்துவம் பெற வைத்துள்ளது என்றார். தமிழுக்கு அவர் ஆற்றும் சேவையா அல்லது பாரதியாரின் புகழ் பரப்பி நன்றி காட்டும்; சேவையா என வியந்து கூறி , குறுந்தட்டு பாடல்;களின் சிறப்புகளையும் வெகுவாகப் பாராட்டி அதனை வெளியிடுவதில் பெருமிதம் அடைவதாய் நன்றிகூறி தனது உரையை நிறைவு செய்தார். முதற் பிரதியை கவிஞர் கந்தவனம் அவர்கள் வெளியிட,  பிரபல சட்டதரணி திருமதி யசோ சின்னதுரை அவர்கள் பெற்றுக்கொண்டார்.

அடுத்த நிகழ்வாக 'உறவு' திரைப்பட இறுவட்டு வெளியிட்டு நிகழ்வு வுஏஐ தொலைக்காட்சி செய்தித்துறை இயக்குனர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் தலைமையில்  இடம் பெற்றது, தனது உரையில் கனேடிய தமிழ்த்திரைப்பட வளர்ச்சி, இங்குள்ள அனுபவமும், ஆற்றலும் திறன்களும் கொண்ட கலைஞர்களின் ஈடுபாடும், அவர்களின் பங்களிப்பையும் வெகுவாகப் புகழ்ந்து, தானும் ஒரு ஊடகத்துறை சார்ந்தவனாகவும், அதே சமயம் திரைப்படத்துறை பற்றிய அனுபவங்களை கொண்ட வகையில் பல்வேறு மேற்கோள்களுடன் சிறப்பாக விவரித்து, உறவு திரைப்படத்தின் கதை அம்சம், அதில் பங்கேற்ற நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களையும் பாராட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். அவரது உரையைத் தொடர்ந்து கவிதாயினி சுல்பிஃகா அவர்கள் உறவு திரைப்படத்தை பற்றிய சிறப்புரை வழங்கினார்.  மார்க்கம் நகரசபை உறுப்பினர் திரு லோகன் கணபதி அவர்கள் வாழ்த்துரை வழங்கி இறுவட்டை வெளியிட்டு வைக்க  முதற் பிரதியை ஸவேதா பைன் ஆhட்ஸ் திரைப்படத் தயாரிப்பாளர் திரு பரராஜசிங்கம் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து இத்திரைப்படத்தின் காட்சிகள் திரையில் தோன்ற, இப்படத்தில் பங்கேற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும், குழந்தை நட்சத்திரங்களுக்கும் குறிப்பாக  கதாநாயகன் திரு பி.எஸ். சுதாகரன், கதாநாயகி அபிநயா டாக்டர் சங்கீதா மற்றும்  தொழ்நுட்பக் கலைஞர்கள் ஊயஅநசயஇ நுனவைiபெஇ ஆரளiஉ என அனைவரும் பாராட்டப்பட்டும், நினைவுப் பரிசுகள் ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். மேலும் மா திரு லோகன் கணபதி அவர்கள் மார்க்கம் நகரசபையின் சார்பில் உறவு திரைப்படத்தின் வெற்றிக்கு துணை நின்ற  60 கலைஞர்களுக்கும், பேசாப்பொருளில குறுந்தட்டில் ; பாடிய 8 கலைஞர்களுக்கும் பாராட்டு;ச சான்றிதழ்  வழங்கிச் சிறப்பித்தார்.

    அன்று வெளியிடப்பட்ட இறுவட்டு மற்றும் குறுந்தட்டு ஆகியவற்றை வருகை புரிந்த அனைவருமே பெற்றுக்கொண்டு திரு திவ்யராஜனுக்கு தங்கள் நல் வாழ்த்துக்களைக் கூறிச் சிறப்பித்தார்கள். நிறைவாக திரு திவ்யராஜன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி தனது ஏற்புரையுடன் அன்றைய வைபவத்தை நிறைவு செய்தார். கதிர்ஒளியும் நமது தாயகக் கலைஞரின் திரைப்படத் தயாரிப்புகள் மேலும் வெளிவந்து நமது சமூகத்தினரை மகிழ்விக்க பெரிதும் பாராட்டி வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது.
திரு திவ்யராஜனை வாழ்த்த விரும்புபவர்கள் அழைக்கவும்: 416 832 5230 – 416 244 2484 

 -புதுவை இராமன்

 
May 24 2013 08:15:54 [Canada]

Read More >

May 24 2013 07:34:38 [Canada]
மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் இயற்கையாக வளரும் ஒருவகை பூஞ்சையினமான இதைச் சிலர் பிடுங்கி எறிவதுண்டு. ஆனால் பல நாட்டவரால் விரும்பி

Read More >

May 24 2013 07:30:44 [Canada]
கனடிய விசாக்கள் குறித்து விரிவான விளக்கமளிக்கும் வகையிலும் அதில் ஸ்காபுறோ மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை தெளிவுபடுத்தும் நோக்கிலும் மக்களின் புகார்களை அரசிடம் கொண்டு

Read More >

May 24 2013 02:31:54 [Canada]
இருதய மற்றும் பாரிசவாத நோய் சம்பந்தமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாகவும், இந் நோய்களினால் எற்றபடும் உயிர் இழப்புக்களை தடுக்கும் ஆராய்ச்சிகளை

Read More >

May 24 2013 02:21:21 [Canada]
லண்டன் மாநகரில் மக்கள் நெரிசல் மிகுந்த சாலையில் பட்டப்பகலில் ராணுவ வீரர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பிரிட்டனில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் மாநகரின் உல்விச் பகுதியில் நேற்று பிற்பகல் 2.20 மணியளவில்

Read More >

May 24 2013 02:20:13 [Canada]
நேற்று காலை வேளையில் காலேஜ் சுரங்கத தொடரூந்து நிலையத்தில் சில மணி நேரங்கள் பெரும் பரபரப்பு நிலவியது. பெண்மணியொருவர் திடிரென தொடரூந்து நிலையத்தின் தண்டவாளத்தில் குதித்து

Read More >

May 24 2013 02:18:44 [Canada]
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரொறொன்ரோ மாநகர முதல்வர் றொப் போர்ட் கொக்கெய்ன் பிடித்த காணொளியை எப்பாடுபட்டாவது $200,000 கொடுத்து வாங்கி ஒளிபரப்புவோம் என இரு தினங்களுக்கு முன்னர்

Read More >

May 24 2013 02:03:40 [Canada]
பொதுவானதொரு அமைப்பு மட்டுமல்ல , பொது வாழக்கைக்கு வந்து விட்டவர்கள் எந்தத் தவறு செய்தாலும் நேர்மையான ஊடகங்கள் அதனை மக்களுக்கு சுட்டிக் காட்டத்தான் செய்யும். அது ஊடகங்களின் பொறுப்பு

Read More >

May 23 2013 02:22:49 [Canada]
ரொறொன்ரோவின் நிலத்தடி வாகன நிறுத்துமிடம் ஒன்றில் 22 வயதாகும் இளம்பெண் ஒருவர் மூவர் அடங்கிய கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

Read More >

May 23 2013 02:00:14 [Canada]
சோமாலியா கடத்தல் பேர்வழிகளுடன் இணைந்து மாநகர முதல்வர் கொக்கைன் பிடிப்பது போன்ற காணொளிகள் வெளியான சில நாட்களுக்குப் பின்னர், இந்த விடயத்தில் பதில் சொல்ல றொப் போர்ட் நேரடியாக

Read More >