மலையகத்தில் தமிழில் உரையாற்றிய மோடி!

ekuruvi-aiya8-X3

modi-ji-759-720x450இன்று மலையகத்திற்குப் பயணம் செய்துள்ள இந்தியப் பிரதமர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையை திறந்து வைத்துள்ளதுடன், தமிழிலும் சில வரிகளில் உரையாற்றி மலையக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

சில தமிழ்மொழி பற்றியும், திருக்குறள் போன்ற பிரசித்தமான வரிகளை தமிழில் கூறி இறுதியில் நன்றியும் தமிழில் கூறி உரையாற்றியுள்ளார்.

நோர்வூட் மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், மோடியின் உரைக்கு ஆரவாரம் செய்து, கைதட்டி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அத்துடன் தனது உரையின்போது, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுப்பதாகவும் உறுதியளித்துள்ளதுடன், மலையக மக்களின் அடையாளத்தை மேம்படுத்துவதற்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவும் எனவும் உறுதியளித்துள்ளார்.

Share This Post

Post Comment