ஐ.நா பொதுச் சபையில் ஜனாதிபதி இன்று உரையாற்றுகிறார்.

ekuruvi-aiya8-X3

maithi458ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையின் 72வது பொதுக்கூட்ட அமர்வில் இன்று உரையாற்றுகிறார்.

மக்களை மையப்படுத்தி நிலையானதொரு உலகில் அனைவருக்கும் சமாதானம் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்காக உண்மையாக உழைத்தல் என்ற கருப்பொருளின் கீழ் இம்முறை பொதுச்சபைக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் முதல் தடவையாக பொதுச் சபையில் உரையாற்றும் அமர்விலும் ஜனாதிபதி கலந்து கொள்வார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக அன்தானியோ குட்ரேஸ் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நடைபெறும் முதலாவது கூட்டத் தொடர் இதுவாகும்.

Share This Post

Post Comment