கிண்ணியா உப்பாறு பகுதியில் 58பேருக்கு காணி வழங்கல்!

ekuruvi-aiya8-X3

kinniya4522காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய கிண்ணியா உப்பாறுப் பகுதியில் 58 குடும்பங்களுக்கு 10பேர்ச்சஸ் காணி வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி சொந்த முயற்சியில் தமது வாழ்வை நடாத்தி வந்த குடும்பங்களிலிருந்து கோரப்பட்ட 137 விண்ணப்பங்களிலிருந்து முதற்கட்டமாக 58பேர் தெரிவுசெய்யப்பட்டு இக்காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த காணிகளைத் துப்புரவு செய்வதற்கான செலவாக 25,000 ரூபாவும், அபிவிருத்தி நிதியாக 1, 50,000ரூபா நிதியும் அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் சிறீலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அத்துடன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னான்டோ, மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், மாகாண மீள்குடியேற்றம் மற்றும் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மற்றும் பல அதிகாரிகளும் பங்கேற்று மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்களை வழங்கிவைத்தனர்.

kinniya7545 kinniya658

Share This Post

Post Comment