துண்டித்த காலை நோயாளி தலைக்கு தலையணையாக வைத்த கொடூரம்

ekuruvi-aiya8-X3

UP_doctors11விபத்தில் சிக்கியவரின் இடது காலை துண்டித்து அவரிடமே தலைக்கு தலையணையாக படுக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிம் ஜஹான்சி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கியதில் இடது கால் பலத்த காயத்துடன் பந்தல்காண்ட் என்ற பகுதி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது டாக்டர்கள் அவரது காலை துண்டித்து விட்டனர்.

கட்டிலில் படுக்க வைத்திருந்த நிலையில் தலைக்கு தலையணை வழங்காததால் துண்டித்த காலையே தலையணையாக வைத்துள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் மொபைலில் படம் பிடித்து சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து விசாரணை நடத்திட அம்மாநில அரசு உத்தரவிட்டது.

Share This Post

Post Comment