உன்னிக் கிருஸ்ணனுக்கெதிராக யாழில் சுவரொட்டிகள்!

Thermo-Care-Heating

unni-notesஇன்று யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்த வந்த பின்னணிப் பாடகர் உன்னிக்கிருஸ்ணனுக்கெதிராக யாழ். நகரின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன..

யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்த வந்த பின்னணிப் பாடகர் உன்னிக் கிருஸ்ணன் மற்றும் அவரது மகள் உருத்ரா கிருஸ்ணன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர்.

பாடகர் உன்னிக்கிருஸ்ணனுக்கெதிராக ‘எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய உன்னி எங்கள் மண்ணில் இன்னிசை பாட முடியாது’ எனக் குறிப்பிட்டுள்ளதுடன், உன்னிக்கிருஸ்ணன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் சுவரொட்டியின் அடியில் யாழ். மக்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ideal-image

Share This Post

Post Comment