சிறையில் உண்ணாவிரதம் இருந்த விமல் வீரவன்ச மருத்துவமனையில் அனுமதி

ekuruvi-aiya8-X3

vimal-jailவெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இரண்டரை மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்சவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிணை வழங்க மறுக்கப்பட்டதை அடுத்து, கடந்த மார்ச் 22ஆம் நாள் தொடக்கம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.

நேற்று காலை அவரது உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share This Post

Post Comment