ஏமாற்றப்பட்டதால் மீண்டும் உண்ணாவிரதத்தில் குதிக்கும் இலங்கை தமிழ் அரசியல் கைதிகள்

ekuruvi-aiya8-X3

jejil4455நாடுதழுவிய ரீதியில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தமது விடுதலையினை வலியுறுத்தி மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்’ என்று வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றத் தவறிவிட்டதனால், மீண்டும் நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 08ம் திகதி உண்ணாவிரத போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த போது, ‘அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியை நான் நம்புகின்றேன். நீங்கள் எங்களை நம்புங்கள்’ என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வாக்குறுதி அளித்து உண்ணாவிரதத்தினை நிறைவு செய்யுமாறும் வலியுறுத்தியிருந்தார்.

எனினும் இதுவரையில் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்தே எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் தமது உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பிக்க அரசியல் கைதிகள் முடிவு செய்துள்ளதாகவும், உண்ணாவிரத போராட்டம் தொடர்பான கடிதம், சிறைச்சாலை ஆணையாளருக்கு, அரசியல் கைதிகளால் கையளிக்கப்பட்டுள்ளாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share This Post

Post Comment