சிறைகளில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உண்மை நிலை அறிந்து கூற வேண்டும்- சிறைக் கைதிகளின் உறவுகள்

Facebook Cover V02

jejilஇலங்கைச் சிறைகளில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உண்மை நிலை என் மனித உரிமை ஆணைக்குழுவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் உடன் அறிந்து கூற வேண்டுமென சிறைக் கைதிகளின் உறவுகள் யாழ்.மனித உரிமை ஆணையர் கனகராஜ்சிடம் நேற்றைய தினம் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐ.நா பரிந்துரையின் பிரகாரம் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கி கைதிகள் விடுதலைக்கு நல்லாட்சி அரசு உதவும் என எதிர் பார்த்தும் நடக்காத சூழலில் தற்போது 14 அரசியல் கைதிகள. மீண்டும் கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு இலங்கைச் சிறைகளில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உண்மை நிலை என்ன என்பது தொடர்பில் பூரண தகவல்கள்அறிய முடியவில்ல. எனவே இவர்கள் தொடர்பான உண்மை நிலையினை உடனடியாக மனித உரிமை ஆணைக்குழுவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் அறிந்து உறவுகளுக்கு கூற வேண்டும்.

ஏனெனில் கடந்த காலங்களில் சிறைகளில் கைதிகள் தமக்கு நீதி வேண்டும் என போராட்டங்கள் நடாத்தியவேளையில் சிறை அதிகாரிகளை ஏவி விட்டு படுகொலை புரிந்த நிகழ்வுகளும் உண்டு. அவ்வாறு கொல்லப்பட்ட டெல்றொக்சன் , நிமலரூபன் போன்றவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.

எனவே இவற்றைக் கருத்தில்க் கொண்டு சிறையில் உள்ள எமது உறவுகளின் தற்போதைய நிலவரம் தொடர்பில் உண்மாயான நிலவரத்தினை உடன் அறிந்து கூறுங்கள் என சிறைக் கைதிகளின் உறவுகள் யாழ்.மனித உரிமை ஆணையர் கனகராஜ்சிடம் நேற்றைய தினம் அவசர கோரிக்கை மகயரைக் கையளித்தனர்

Share This Post

Post Comment