காலநிலை குறிக்கோள்களை ஹார்ப்பர் அரசு அடைவது கடினமே - எச்சரிக்கிறார் ஸ்காட் வோகன்
May 09 2012 06:05:15

பருநிலை மாறுபாடு கொள்கைகள் , அதற்காகும் செலவீனங்கள் குறித்து அறியாத நிலையிலேயே இன்னமும் ஹார்ப்பர் தலைமையிலான கோன்செர்வேற்றிவ் அரசு செயல்பட்டு வருகிறதென மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் பேண்தகு அபிவிருத்திக்கான ஆணையர் ( federal commissioner of the environment and sustainable development) ஸ்காட் வோகன் (Scott Vaughan) எச்சரித்துள்ளார். பருவநிலை மாற்றங்களினால் ஏற்பட உள்ள ஆபத்துக்களை அரசு மிகுந்த கவனத்துடன் ஆராய வேண்டுமெனவும் தொழிற்சாலைகள் மேம்பாடு குறித்து மறு மதிப்பீடுகள் செய்யப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று தன்னுடைய துறைக்கான தணிக்கை விபரங்களை பாராளுமன்ற அவையில் சமர்பித்த போதே ஸ்காட் வோகன் (Scott Vaughan) இதனைத் தெரிவித்துள்ளார். சுற்றுச் சூழல் கவனக் குறைவினாலும், முன் கூட்டியே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததாலும் அண்ணளவாக $7.7-பில்லியன் பெறுமானமுள்ள இடங்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக தூய்மையற்றுக் கிடப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதே நிலை நீடிக்குமானால் ஹார்ப்பர் பருவ நிலை மாறுபாடு குறித்த தன் சொந்த குறிக்கோள்களை அடைவது மிகுந்த கடினமாகி விடும் என்பதோடு  கொள்கைகளுக்கு எதிராக அரசு செயல்பட்டு வருவதாகவும் குற்றஞ்ச்சாட்டியுளார்.

முன்பிருந்த குறைகளைத் திருந்த்த நாம் பின்னோக்கி செல்வது சாத்தியமில்லை என்பதால் சுற்றுச் சூழல் சட்டங்களில் புதிய மாற்றங்களைப் புகுத்தவும் மாநில அரசுகளுக்கு இது தொடர்பான விடயங்களில் உரிமை அளிக்கவும் வேண்டும் எனபதையும் வாகன் சுட்டிக் காட்டியுள்ளார்.

 
Jun 18 2013 10:39:09 [Canada]
கணக்கிலடங்காத ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுககளுக்காக மொன்றியல் மாநகர முதல்வர் மைக்கேல் அப்ப்லெபௌம் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பதவிக்கு வந்த சில

Read More >

Jun 18 2013 10:32:54 [Canada]
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இன்றைய நவீன கால கட்டத்தில் மிதிவண்டி ஓட்டுபவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், ஆபத்துக்களையும் விளக்கும் விதத்திலும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலை காப்பாற்றுவதில் மிதிவண்டிகள் வகிக்கும்

Read More >

Jun 17 2013 09:50:46 [Canada]
கடந்த ஆண்டு கனடாவில் படமாக்கப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 19ம் திகதி வெளியாகவிருக்கும் லெனின்.எம்.சிவத்தின் இயக்கத்தில் புலம் பெயர்ந்த நாடுகளில் வசிக்கும்கலைஞர்களினால் உருவான A Gun & A Ring என்ற தமிழ்த் திரைப்படம்

Read More >

Jun 17 2013 09:38:10 [Canada]
தமிழின உணர்வாளர், இயக்குனர், நடிகர் எனப் பல பரிமாணங்களை கொண்ட மனிதர்களுள் ஒருவரான மணிவண்ணனின் மறைவு ஒட்டு மொத்த தமிழினத்தையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

Read More >

Jun 17 2013 09:25:33 [Canada]
வடக்கு யோர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நேற்று காலை துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நடந்ததாகத் தெரிய வந்துள்ளது. அதிகாலை 3

Read More >

Jun 16 2013 10:24:39 [Canada]
பிரோம்ட்டனுக்கு வடக்கே போகல் சாலையில் நேற்று காரொன்று பார ஊர்தியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. இதில் Ford F-350 காரில் பயணம் செய்த கோபிநாதன் தங்கவேலு, 40 சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

Read More >

Jun 16 2013 10:21:44 [Canada]
சிரியா தொடர்பான விவகாரங்களில் ஜி-8 நாடுகள் கடும் சவால்களைச் சந்தித்து வருவதால் இது தொடர்பில் முடிவெடுக்கு வகையில் ஜி-8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இரண்டு நாள் மாநாடு ஒன்று வடக்கு அயர்லாந்தில்

Read More >

Jun 16 2013 10:18:45 [Canada]
பல ஆயிரக்கணக்கான கனடிய மக்களுக்கு வரியில்லா சேமிப்புக் கணக்குகளின் விதிமுறைகள் சரிவரத் தெரிவதில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றை தெரிந்து கொள்வதில் மக்கள் பலர் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகின்றனர்

Read More >

Jun 16 2013 10:15:59 [Canada]
கடந்த சனிக்கிழமை லிட்டில் இத்தாலி என்றழைக்கப்படும் இத்தாலிய தெரு விழாவில் கலந்து கொண்ட மாநகர முதல்வர் றொப் போர்ட் மீது பெண்மணியொருவர் பழச்சாற்றினை வீசி எறிந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே

Read More >

Jun 15 2013 20:32:09 [Canada]
தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 15.06.2013 அன்று இழந்துவிட்டது. இவரின் இரங்கல் நிகழ்வு கனடாவில் நடைபெறும் விபரம் பின்வருமாறு.

Read More >