உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல்போனவர்களின் உறவுகளுக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்!

Facebook Cover V02

cid-4காணாமல்போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உறவுகளை சிறீலங்காப் புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுப்பதோடு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.

தமிழர் தாயகப் பிரதேசத்தில் தம்மால் நேரடியாக இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கப்படுத்தவேண்டுமெனவும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டுமெனவும் கோரி சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் கையில் கமராவுடன் சென்று அம் மக்களையும், அவர்கள் கூறும் கருத்துக்களையும் ஒளிப்பதிவு செய்தும், புகைப்படம் எடுத்தும் வருகின்றனர். அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

cid-1

Share This Post

Post Comment