ரெயிலில் பயணிகளுக்கு கொடுக்கப்பட்ட உணவில் மயக்க மருந்து – 12 லட்சம் ரூபாய் கொள்ளை

CoimbatorePollachi-train-resumes-after-eight-years_மும்பையிலிருந்து டெல்லி வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளுக்கு கொடுக்கப்பட்ட உணவில் மயக்க மருந்து கலந்ததாக கூறப்படுகிறது. அதன் பின் அவர்களிடமிருந்த நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ‘நேற்று இரவு சாப்பிட்ட பின் திடீரென அனைவரும் உறங்கி விட்டோம். காலையில் டெல்லி நிஜாமுதீன் ரெயில் நிலையம் வந்ததும் விழித்து பார்த்த போது எங்களிடமிருந்த நகை, பணம் மற்றும் பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. உடனே நாங்கள் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தோம். புகாரும் அளித்துள்ளோம்.’ என கூறினர்.

பயணிகளிடம் இருந்து சுமார் 12 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.






Related News

  • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
  • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
  • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
  • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
  • சபரிமலை சம்பவம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு
  • பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
  • கஜா புயல் எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு
  • கஜா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நாளை ஆலோசனை
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *