உளுக்கு, சுளுக்கு, வாதம்

ரதன்

பில் 148 என்பது 148வது ஷரத்து – ஒன்ராரியோ லிபரல் அரசினால் கொண்டுவரப்பட்டது. 148ல் முக்கியமாக,  ஒரு தொழிலகத்தில் வேலை சுழற்சி இறுதி நேரத்தில் மாற்றப்படுமாயின், மூன்று மணித்தியாலங்களுக்கான வேதனம் தொழிலாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒவ்வொரு வருடமும் பத்து நாட்கள் சுகயீன நாட்கள் வழங்கப்பட வேண்டும். இதில் இரண்டு சுகயீன நாட்களுக்கு தொழிலகம் வேதனம் வழங்க வேண்டும். பகுதி நேரத் தொழிலாளிகளுக்கும், சட்டபூர்வமான விடுமுறைகளுக்கு வேதனம் வழங்கப்படவேண்டும். 2018ன் ஆரம்பத்தில் ஆகக் குறைந்த 14 டொலர்களாகவும், 2019ன் ஆரம்பத்தில் 15 டொலர்களாகவும் சட்டபூர்வமாக்கப்பட்டது. தொழிலகங்கள் 2019ன் ஆரம்பத்திலிருந்து 15 டொலர்கள் தொழிலாளிகளுக்கு வழங்க வேண்டும். ஒரு தொழிலாளி, ஒரே தொழிலகத்தில் ஐந்து வருடங்கள் வேலை செய்திருப்பின் மூன்று வாரங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படவேண்டும். பகுதி நேர மற்றும் ஒப்பந்த அடிப்படைத் தொழிலாளர்களின் நலன்களை ஷரத்து 148 பாதுகாத்தது.
லிபரல் ஊழல் ஆட்சி எனப் பிரச்சாரப்படுத்திய, பழமைவாதக் கட்சி, லிபரல் அரசு கொண்டுவந்த பல நல்ல விடயங்களையும் மாற்றிவருகின்றது. பழமைவாதக் கட்சி தொடர்ந்து மேல் தட்டு வர்க்கத்தினருக்கான கட்சி என்பதனை நிரூபித்து வருகின்றது. ஷரத்து 148லிருந்து பல பகுதிகள் நீக்கப்படவுள்ளன. 2019ன் ஆரம்பத்தில், சம்பள உயர்வு ஒரு டொலரால் அதிகரிக்கப்படவேண்டும். இது நடைமுறைப்படுத்தப்படாது. இதனால் சுமார் இரண்டாயிரம் டொலர்களை ஒரு தொழிலாளி இழக்கின்றார். இது ஒரு தொழிலாளியின் வாழ்க்கைத் தரத்தை பின் தள்ளுகின்றது. இறுதி நேர சுழற்சி நீக்கத்துக்கான மூன்று மணித்தியால வேதனமும் நீக்கப்படுகின்றது. நிரந்தர தொழிலாளிகளைத் தவிர, பகுதி நேர, ஒப்பந்த அடிப்படைத் தொழிலாளர்களின் நலன்களை, பழமைவாதக் கட்சி அழித்துள்ளது.

லிபரல் அரசு சுமார் 4000 ஒன்ராரியோ பிரசைகளுக்கு, அடிப்படை வேதனத்தை, ஒரு மாதிரித் திட்டமாக வழங்கிவந்தது. இது நீக்கப்பட்டு விட்டது. இவர்களுக்கான அடிப்படை மாற்றீடு எதுவும் செய்யப்படவில்லை
கடந்த சில வருடங்களாக பருவ கால மாற்றங்கள் தலை கீழாகத் தொங்குகின்றன. வட துருவம், தென் துருவம் கடும் பனிக் கட்டிகளை மத்திய தரைக் கோட்டை நோக்கி நகர்த்துகின்றன. கடுங் குளிர், கடும் வெப்பம், மிக மோசமான வெள்ளப் பெருக்குகள், சூறாவளி, சண்டமாருதம், சூழ்வளி, புயற் காற்று அனைத்தும உலகின் பல பிரதேசங்களை அழித்துவருகின்றது. சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். வாகனங்களின் இருந்து வெளியேறும் புகை, சுற்றுச் சூழலை பாதிக்காமல் இருக்க வேண்டும். இதற்காக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வாகனங்கள், பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. இதனை டக் போர்ட் நீக்கியுள்ளார். அது மட்டுமா? மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தையும் நீக்கியுள்ளார்.

லிபரல் அரசு போதை மருந்து விற்பனையை (மருத்தவத்திற்காக) அரச அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் விற்க ஏற்பாடுகளை செய்து வந்தது. டக் போர்ட், இதனை 500-1000 தனியார் கடைகளுக்கு போதை மருந்து விற்க அனுமதி வழங்கப்படும். இது பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்கள் பாவனையை அதிகரிக்கும்.

போதை மருந்தை சட்டபூர்வமாக்கி, அதனை மூளைக் கடைக்கு கொண்டுவந்த பழமைவாதக் கட்சி, லிபரல் அரசால் கொண்டுவரப்பட்ட 25 வயதுக்கு குறைந்தவர்களுக்கான (முதியோரும் அடங்குவர்) சுமார்  4400 அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. இது இனிமேல்., உங்களுக்கு தனியார் மருத்துவ காப்புறுதி இல்லாத பட்சத்திலேயே வழங்க்கப்படும்.

புதிய பழமைவாதக் கட்சி, தனியார் மருத்துவ நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. இது அரச மருத்துவர்கள், தங்களது நோயாளிகளை, தனியார் மருத்துவ நிலையங்களை நோக்கி தள்ளுவர். இது அரச மருத்துவ நிலையங்களை பெரிதும் பாதிக்கும்.

புழிவாங்கல் நடிவடிக்கையின் முதற்கட்டமாக ஒன்ராரியோவின் தலைநகரமான ரொரன்ரோ மாநகரசபையின் கவுன்சிலர்களின் எண்ணிக்கை 47ல் இருந்து 25 ஆக குறைக்கப்பட்டது. இது ஒன்ராரியோ முதல்வரின் பழிவாங்கல் நடவடிக்கை என பிரதான ஊடகங்கள் குற்றஞ்சாட்டப்பட்டின. எந்த வித ஆய்வுகளுமின்றி, ரொரன்ரோ டவுன் ரவுன் என்.டி.பி கட்சி சார்பு கவுன்சிலர்களை பழிவாங்கும் நோக்குடனேயே இக் குறைப்பு இடம் பெற்றது. இதற்கு எதிராக நடைபெற்ற முதலாவது வழக்கில், ஒன்ராரியோவின் புதிய அரசு தோல்வியுற்றது. இதற்கு பதிலாக டக் போர்ட் கூறியவை இவை. இது மக்லீன்ஸ் சஞ்சிகை இணையத்தளத்தில் உள்ளது.

“I was elected. The judge was appointed,” Ford said at his press conference

Besides, the size of council affects few-to-no constituents outside Toronto—and the heavily populated downtown Toronto largely voted Liberal or NDP anyways.

ஒன்ராரியோ அரசு உடனடியாக, நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக பிரவு 33ல் உள்ள  notwithstanding clause     பாவித்து, ரொரன்ரோ மாநகரசபையின் எண்ணிக்கையை குறைப்போம் என்றது. தற்போதைய பிரதமர் ஜஸ்ரினின் தந்தையின் காலத்திலேயே மாநிலங்களுக்கான அதிக அந்தஸ்து வழங்கலின் கீழ் முன்னால் பிரதமர் கிறிச்சியன் சட்ட அமைச்சராக இருக்கும் பொழுது சட்டமாக்கப்பட்டது.

Finally, on the night of Nov. 4, 1981, then Justice Minister Jean Chr�tien and Saskatchewan Attorney General Roy Romanow hammered out the so-called “Kitchen Accord” – a compromise that included an entrenched Charter of Rights but also included notwithstanding provisions.

இது வரை 15 தடவைகள் கியுபெக், சஸ்கட்சுவான் போன்ற மாநிலங்கள் இச் சட்டத்தை பயன்படுத்தியுள்ளன. தொழிலாளிகளுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிராகவே பயன்படுத்தப்பட்டது. கியுபெக்கில் சிறுபான்மையினரின் மொழி பற்றிய புதிய சட்டத்தை நீதிமன்றம் நிராகரித்தது. கியுபெக் அரசு  notwithstanding clause      பாவித்து சட்டமாக்கியது. பின்னர் கனடிய உச்ச நீதிமன்றம், இச் சடடத்தில் பல தவறுகள் உள்ளன என நிராகரித்தது. பின்னர் பல திருத்தங்களுடன் இது சட்டமாக்கப்பட்டது.

ஓன்ராரியோ அரசு நடைமுறைப்படுத்த இருந்த பிரிவு 33, பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. முன்னால் கொன்சவேற்றவிவ் பிரதமர், முன்னால் லிபரல் பிரதமர்கள் உட்பட, உலகெங்கும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கனடாவின் நகரங்கள் அனைத்தும் எதிர்க் குரல் எழுப்பின. ஒன்ராரியோ அரசு ஒன்ராரியோ மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் மூலம் தற்காலிக வெற்றியைப் பெற்றது. இத்து;டன் இது முடியவில்லை. மீண்டும் உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் இது கனடிய உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லாம். அதன் முடிவுகள் மாநிலத்தையும், மாநகரத்தையும் மாற்றியமைக்கலாம். பலர் மே மாதத்திலேயே தேர்தல் பிரச்சாரங்கள் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அவர்களது சுய செயற்பாட்டிற்கு எதிரான விடயமாகவே எண்ணிக்கை குறைப்பு நடைபெற்றுள்ளது. இது ஒரு நியாயமற்ற செயல்.

தொழிலாளர்களின் நலன்கள் லிபரல் அரசால், சுதந்திரமான ஒரு குழுவால் இரண்டு வருடங்களாக ஒன்ராரியோ முழுவதிலும் உள்ள தொழிலகங்களில் தொழிலாளர்கள் நலன்களை கவனத்திலெடுக்கப்பட்டு, அவர்கள் வழங்கிய ஆலோசனையின் பெயரில் மாற்றப்பட்டன. அவை ஒரு இரவில் எந்தவித ஆலோசனையுமின்றி மாற்றப்படுகின்றன. அதே போன்றதே ரொரன்ரோ மாநகர எண்ணிக்கைக் குறைப்பு.

இது குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்களின் எண்ணிக்கையை ரொரன்ரோ மாநகரத்தில் குறைக்கும். இதற்கு தமிழர்களால், தமிழர்களுக்காக (எனக் கூறி வாக்கு கேட்டு) வெற்றி பெற்றவர்கள் தமிழர்களுக்கு எதிராகவே வாக்களித்துள்ளார்கள். தொழிலாளர்கள் நலன்கள், அகதிகள் போன்ற பல விடயங்களில் ஒன்ராரியோ அரசு புதிய திட்டங்கள் மூலம் தொழிலாளர்களையும், அகதிகளையும் ஒடுக்குகின்றது. தமிழ் சமூகம் வளர்ச்சியடைந்திருந்தாலும், இன்னமும் நாங்கள் அகதி வாழ்விலிருந்து மீட்சி பெறவில்லை. எமக்கெதிரான திட்டங்களுக்கே, எம் பிரதிநிதிகள் வாக்களித்துள்ளார்கள். என்ன கொடுமை இது. ஐயகோ கேட்பாரில்லையா?

இனிமேலாவது நாங்கள் வேட்பாளர் தெரிவில் கவனமாக இருக்க வேண்டும். மாநகரசபை உறுப்பினர்களால் ஒரு சில குறிப்பிட்ட விடயங்களை மட்டுமே செய்ய முடியும்.

அண்மையில் ஒரு வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாகன காப்புறுதியைக் குறைப்பேன் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ் மக்கள் என்ன முட்டாள்களா? நீங்கள் கூறுவது ஒவ்வொன்றைக்கும் தலையாட்டுவதற்கு. நீங்கள் எனது வாரிசு இவர் என்பீர்கள் நாங்கள் வாக்களிக்க வேண்டும். வீதியில் குழியுள்ளது. அது என்னால் தான் ஏற்பட்டது என்பீர்கள். வீதிக்கு தார் ஊத்தப்பட்டுள்ளது. அதுவும் என்னால் தான் என்பீர்கள். தார் ஊத்தாட்டில் அது வீதீ இல்லை. தமிழ் மக்கள் புத்திசாலிகள். திறமையானவர்களை அவர்கள் சரியாக அடையாளம் காணுவார்கள். பிழையானவர்களை தூக்கி எறியவும் தயங்கமாட்டார்கள்.

தமிழர்களுக்கு ஒரு சனசமூக நிலையம் அமைத்துக் கொடுப்பேன் என ரொரன்ரோ மாநகர முதல்வரும் கடந்த தேர்தலில் நின்ற போது குறிப்பிட்டிருந்தார். மார்க்கம் நகரிலும் அவ்வாறு ஒரு குரல் ஒலித்தது. சரி அரோராவிலையாவது எமக்கு ஒரு சனசமூக நிலையம் கிடைக்குமா? அல்லது நாங்கள் அலாஸ்காவிற்குத்தான் செல்ல வேண்டுமா?

ஒன்ராரியோ முதல்வரும் நப்ரா பேச்சுவார்த்தைகள் பூர்த்தியடைய முன்னர், அமெரிக்கா சென்றிருந்தார். என்ன பயன்? நப்ரா, புதயி அமெரிக்க-மெக்சிக்கோ-கனடா ஒப்பந்தமாக மாறிய பின்னர், ஒன்ராரியோ விவசாயிகளுக்கு பாதிப்பு என்றார். பாற் பொருட்களுக்கான மூன்று சதம் ஆறு வீத சந்தைத் திறப்பு அதிகளவு கியுபெக்கையே பாதிக்கும். ஆனால் மாற்றீடாக அரச மானியம் இவர்களுக்கு வழங்கப்படும். அடுத்த பத்து வருடத்துக்குள்ளேயே இது நடைபெறும். புதிய ஒப்பந்தத்தில், ஒன்ராரியோவை பாதிக்கும் விடயங    ;களைப் பற்றி, புதிய ஒன்ராரியோ அரசு கதைக்கத் தவறிவிட்டது. மாறாக கனடிய பிரதமரை அடுத்த தேர்தலில் ஆட்சியிலிருந்து இறக்குவோம் என சூளுரைக்கப்பட்டுள்ளது.

நப்ராவில் உள்ள உடன்பாட்டு விதிகள் 2010,2011 ஆகியவை கனடிய நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகின்றன. கனடிய மாநில அரசுகளும் இவ் விதி முறைகளுக்கு கீழ் இயங்க வேண்டியுள்ளது. 1991ல் ஒன்ராரியோவின் என்.டி.பி அரசு வாகன காப்புறுதியை சுஸ்கட்சுவான், பிரிட்டிஸ் கொலம்பியா ஆகிய மாநிலங்களில் உள்ளது போல் அரசமயமாக்க விரும்பியது. அமெரிக்க காப்புறுதி நிறுவனமான ஸ்ரேற் பார்ம்  (State Farm) இதே 2010, 2011 விதி முறைகளின் கீழ், 1.3 பில்லியன் டொலர்களை ஒன்ராரியோ அரசு நட்ட ஈடாக கொடுக்க வேண்டும் எனக் கூறியது. பின்னர் என்.டி.பி அத் திட்டத்தை கைவிட்டுவிட்டது. ஒன்ராரியோவில் இதனால் தான் வாகன காப்புறுதி அதிகமாகவுள்ளது. அதற்குள் எங்கள் வேட்பாளர் ‘வாகன காப்புறுதியைக் குறைப்பேன்’ என சூளுரைத்துள்ளார். இவ்விரு ஒப்பந்த விதிகளும் புதிய ஒப்பந்தத்திலும் உள்ளன. இவ் விதிகள் பெரும் நிறுவனங்களை பாதுகாக்கின்றன. இதனால் மக்கள் பாதிப்படைகின்றார்கள். உங்களுக்கு உளுக்கு, சுளுக்கு, வாதம் வரலாம். உங்களைக் காப்பாற்ற மருந்துகள் உள்ளன. ஆனால் நீங்கள் அவற்றிற்கு அருகே நெருங்க முடியாது. உங்களுக்கும், அவற்றிற்குமான இடைவெளி மிக அதிகம்.

https://www.macleans.ca/politics/why-doug-ford-went-straight-to-the-nuclear-option-on-toronto-city-council/

https://www.globalresearch.ca/a-multibillion-dollar-question-is-the-canada-us-free-trade-agreement-still-in-effect/5656569

ரதன்


Related News

 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும்
 • நான்கு தமிழர்கள் டொரோண்டோ ,மார்க்கம் கல்விச்சபைகளில் வெற்றி
 • உளுக்கு, சுளுக்கு, வாதம்
 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *