உளவாளிகளுடன் 16 பாகிஸ்தான் தூதரக ஊழியர்களுக்கு தொடர்பு?

Facebook Cover V02

Expelled-Pakistanபாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் மேலும் 16 ஊழியர்கள் உளவாளிகளுடன் தொடர்பில் இருப்பதாக சமீபத்தில் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தூதரக ஊழியர் கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்த மெக்மூத் அக்தர் என்ற ஊழியர் ஐ.எஸ்.ஐ. நிறுவனத்துக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிவரும் மேலும் 16 பேர் பாகிஸ்தான் உளவாளிகளுடன் தொடர்பில் இருந்தனர் என்று மெஹ்மூத் அக்தர் விசாரணையின்போது கூறியதாக காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தகவல்கள் குறித்து தொடர்ந்து சரிபார்க்கப்படுவதாகவும், அது உண்மையாக இருந்தால் வெளியுறவுத்துறையின் கவனத்திற்கு காவல்துறை கொண்டு செல்லலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

அக்தருக்கு ரகசிய ஆவணங்கள் மற்றும் தகவல்களை கொடுத்து வரும் உள்ளூர்வாசிகளை கண்டறிந்து பிடிப்பதற்காக ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் குற்றப்பிரிவு தனிப்படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Share This Post

Post Comment