யோஷித ராஜபக்ஷவிற்கு தந்தையுடன் உகண்டா செல்ல முடியவில்லை

ekuruvi-aiya8-X3

yosinthaஉகண்டாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவதற்கு யோஷித ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை கடுவலை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

உகண்டாவின் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் தனது தந்தையுடன் கலந்து கொள்வதற்காக அங்கு செல்வதற்கான அனுமதி வழங்குமாறு கோரி அவரின் சட்டத்தரணிகளால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த மனுவை நிராகரித்த கடுவலை நீதவான் நீதிமன்றம் குறித்த மனுவை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறு கூறியுள்ளது.

சி.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment