உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழினியின் கணவர் ஜெயக்குமார் தெரிவித்ததாக தகவல் வெளியிடு

ekuruvi-aiya8-X3

jeyakumarதமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் கணவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாக எவ்.ரீ.எல்கே என்ற ஆங்கில இணையம் செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்த இணையத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒரு தரப்பினர் தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழினியின் ஓர் போர்வாளின் நிழலில் நூல் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் தின மற்றும் வேறும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு கடந்த காலங்களில் பணம் திரட்டிய தரப்பினர் தற்போது பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக பிரச்சாரம் செய்து புலிகளை மீளவும் இயங்கச் செய்ய முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறெனினும் தமிழீழ விடுதலைப் புலிகளை மீளவும் சர்வதேச ரீதியாக இயங்கச் செய்ய எவ்வித சாத்தியமும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் சில பகுதிகளில் தமிழ் வர்த்தக நிலையங்களில் இந்த நூல் விற்பனை செய்ய செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தாம் பிரித்தானியாவில் வாழ்ந்த போது புலிகளில் இணைந்து கொள்ளுமாறு சில முகவர்கள் கோரியதாகவும் பொட்டு அம்மான் தலைமை தாங்க உள்ளதாகவும் குறிப்பிட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்வி அறிவு குறைந்த தமிழர்களே இவ்வாறு பிரசாரங்களில் இ
லக்கு வைக்கப்பட்டதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியைப் பயன்படுத்துவோர் இவ்வாறு அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment