நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த 25 வீரர்களின் உடல்களுக்கு ராஜ்நாத் சிங் நேரில் மலரஞ்சலி

Thermo-Care-Heating

Rajnath-Singh-pay-tribute-to-25-CRPF-Personnelசத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் அங்கு மத்திய ரிசர்வ் படையினர் முகாமிட்டு நக்சலைட்டுகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கலபதர் என்ற வனப்பகுதியில் ரிசர்வ் படையினர் அங்குள்ள மோசமான சாலையை சீரமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அங்கு திடீரென வந்த நக்சலைட்டுகள், ரிசர்வ் படையினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதனால் ரிசர்வ் படையினர் நிலைகுலைந்தனர். இச்சம்பவத்தில் ரிசர்வ் படையினர் 25 பேர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். பல வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

201704251143469434_crpf2._L_styvpf.gifநக்சலைட்டுகளின் இந்த கோர தாக்குதலுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை ராய்ப்பூர் வந்தடைந்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் ஆதிர் ஆகியோர் பலியான வீரர்களின் உடல்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் சத்தீஸ்கர் முதல்மந்திரி ராமன் சிங்கும் வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

உரிய மரியாதையுடன் அஞ்சலி செலுத்திய பின்னர் வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

ideal-image

Share This Post

Post Comment