லண்டன் உயிரியல் கழகத்தின் 2016ஆம் ஆண்டுக்கான போட்டியில் முதல் பரிசு இந்தியருக்கு

ekuruvi-aiya8-X3

லண்டன் உயிரியல் கழகம் நடத்திய 2016ஆம் ஆண்டுக்கான வனவிலங்கு புகைப்பட கண்காட்சியில் முதல் பரிசைப் பெற்ற படம் இது. இந்தியாவின் சால்கேவாடி பீடபூமிப் பகுதியில் இந்த விசிறிவகைப் பச்சோந்தியின் படத்தை எடுத்தவர் ப்ரதீக் பிரதான். வித்தியாசமான மற்றும் அற்புதமான படங்கள் பிரிவில் இந்தப் படம் முதலிடம் பெற்றது

judgeschoiceandadultcat3winnerreadysetgo-cpratikpradhan-450x253

இளையோருக்கான பிரிவில் பங்கேற்று பரிசு வென்றவர் அலீசியா ஹேய்டன். ஐல் ஆஃப் மேன் பகுதியில் சிறகடித்து பறகும் ஆர்ட்டிக் டெர்ண் ஜோடியை அவர் படம் பிடித்தார். கறுப்பு வெள்ளையில் இந்தப் படம் மிகச்சிறப்பாகவுள்ளது எனத் தேர்வுக் குழுவினர் பாராட்டு

judgeschoiceandcat1juniorwinnerin-flightfight-caliciahayden-450x299

முடிந்தால் பிடியுங்கள்’ பிரிவில் பரிசு பெற்ற இப்படத்தை எடுத்தவர் அலெக்சாண்டர் ஹோல்டன். மீன்கொத்திப்பறவை லாவகமாக ஒரு மீனைப் பிடித்த காட்சியை அவர் படமாக்கியுள்ளார்.

91216291_95d6b426-a4b5-4abd-8f82-fe14bc7cb23a-450x299

வித்தியாசமான படங்கள் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பெற்ற இப்படத்தை எடுத்தவர் மைக் ரெயிஃப்மேன். கூட்டத்தில் வித்தியாசமாகத் தெரியும் பென்குவினை அவரது படம் காட்டுகிறது

91211003_cat3adultrunnerup-kingpin-cmikereyfman-450x281

சூரிய ஒளியில்’ பிரிவில் அஸ்த்தமன வேளையில் நீரோடை ஒன்றில் வாய் பிளந்த நிலையில் இருந்த நீர் யானையை படம் பிடித்தவர் ஜெரிமி க்யூசாக். இந்தப் படத்தை தேர்வுக் குழுவினர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்

91216411_3b1a8680-c09b-43b8-ab16-d6ba5ac5db5c-450x341

.நகர வாழ்க்கை எப்படியுள்ளது என்பதைக் காட்டும் இப்படம் ஒஸ்கான் ஒஸ்மெனால் எடுக்கப்பட்டது. குரங்குக் குட்டி ஒன்று வழி தெரியாமல் வாகனத்துக்கு அருகில் நிற்கும் இந்தப் படம் நகர வாழ்க்கையின் யதார்த்தங்களை காட்டுக்கிறது.

91216341_590ce217-a43f-4e29-b937-ed6b078619a2-450x299

குடிநீருக்காக குரங்கும் அலையும் இப்படத்தை எடுத்தவர் கார்லோஸ் பெரெஸ் நவால். ‘குடிநீருக்கான உத்திகள்’ தலைப்பில் இளையோர் பிரிவில் இப்படம் பரிசு வென்றது.

91211932_cat5juniorwinner-strategiesfordrinking-ccarlospereznaval-450x308

இந்தப் புகைப்படப் போட்டியில் வென்ற புகைப்படங்கள், லண்டன் உயிரியல் கழகத்தின் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. நீரிலிருந்து தலையைத் தூக்கிப்பார்க்கும் இந்தத் தவளையின் படத்தை கிடியன் நைட் எடுத்துள்ளார்.

91216412_da04d1c5-ab7c-4a40-baa4-ad45e4e82f71-450x299

Share This Post

Post Comment