உடனடி வேலைவாய்ப்பு சிலோன் நூற்றல் நெய்தல் ஆலை – வல்லை உடுப்பிட்டி

Facebook Cover V02

சிலோன் நூற்றல் நெய்தல் ஆலை – வல்லை
மேற்படி நிறுவனத்தில் பலதரப்பட்ட ஆடைவகைகள் பெருந்தொகையில் உருவாக்கி விநியோகம் செய்யப்படுகின்றது. தற்போது இந்த ஆலையில் 4 நிலைகளுக்கு விண்ணப்பங்கள் கேரப்படுகின்றது.

1)நிர்வாக அதிகாரி

ஆடைகளை உற்பத்தி செய்யும் மேற்படி ஆலையில் நிர்வாக அதிகாரிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்.
தகமை: கணக்கியல், பொருளியல் அல்லது வியாபார முகாமைத்துவ பட்டதாரியாகவோ இருத்தல் வேண்டும். ஆடை உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் விரும்பத் தக்கது.சம்பளத்தை பேசி தீர்மானிக்கலாம்.
2. டிசைனர் – ஸ்தாபனம் தனக்கென சில ஆடைகளை சந்தைப்படுத்துவதால் அதனை மெருகூட்ட அனுபவமும் கற்பனை வளமும் உள்ள வடிவமைப்பாளர் தேவைப்படுகிறார்.
தகமை: க.பொ.த சாதாரண பரீட்சையில் கணிதமும் ஆங்கிலமம் சித்தியெய்தி, உயர்தர பரீட்சையில் இரண்டுபாடங்கள் சித்தி எய்தி இருந்தால் பயிற்றுவிக்கப் படுவார்கள்..முன்னர் வடிவமைத்த மாதிரிகள் நேர்காணலின்போது சமர்ப்பித்தல் விரும்பத்தக்கது.
3. எம்புரொயிடரி இயந்திர புறோகிராமர்ஓட்டுனர்: எம்புறொய்டறி இயந்திரத்திற்கான கட்டளைகளை புரிந்து கொள்ளும்; திறனுள்ள கணணி விற்பன்னர் தேவைப்படுகிறார்.
தகமை: கணணி பட்டதாரியாக இருத்தல் விரும்பத் தக்கது. போட்டோசொப் மென்பொருள் அறிவு முக்கியம். தொழிலில் பயிற்றுவிக்கப் படுவார்.
4. துணி வெட்டுனர்: மேலதிக குழு ஒன்று உருவாக்கப்பட இருப்பதால் ஆடை தயாரிப்பில் ஆர்வமுள்ளவர்கள் தேவைப்படுகின்றார்கள்
தகமை: க.பொ.த சாதாரண பரீட்சையில் கணிதமும் ஆங்கிலமும் சித்தியெய்தி, உயர்தர பரீட்சையில் இரண்டுபாடங்கள் சித்தி எய்தி இருந்தால் பயிற்றுவிக்கப் படுவார்கள்.
5. தையல் தொழிலாளிகள் – மேலதிக தையல் இயந்திங்களை இயக்குவதற்கு ஆற்றல் நிறைந்த தொழிலாளிகள் தேவைப்படுகிறார்கள்
தகமைகள்: வேறு தையல் தொழிற்சாலையில் வேலை பார்த்த முன்ன அனுபவம் விரும்பத்தக்கது.
உங்கள் சுயவிபரக்கோவையை பின்வரும் மின் அஞ்சல்களுக்கு அனுப்பி வைக்கவும்.  sorna7750@gmail.com ,  puthiyavelicham.org@gmail.com
தொலைபேசி : 077-699-3335

101927387-450313917.530x298

 

 

Share This Post

Post Comment