உடல்நிலை தேறி வந்தபோது ஜெயலலிதா ‘திடீர்’ என்று மரணம் அடைந்தது எப்படி?

ekuruvi-aiya8-X3

Jayalalithaa_2160611f-450x275முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக தேறி வந்தபோது திடீரென்று அவர் மரணம் அடைந்தது எப்படி? என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை இப்படி திடீரென முடிவுக்கு வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

68 வயதே ஆன நிலையில் அவர் காலமானது தமிழகத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் நீங்காத அதிர்ச்சியாகவும், சொல்ல முடியாத துயரமாகவும் மாறியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜெயிலுக்கு சென்று வந்ததில் இருந்தே அவர் உடல் நலம் குன்றிதான் காணப்பட்டார். என்றாலும் கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததும் அவரிடம் புத்துணர்ச்சி ஏற்பட தொடங்கி இருந்தது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது கூட அவர் குணமாகி வீடு திரும்பி விடுவார் என்ற எண்ணம்தான் மக்கள் மனதில் நிலவியது. அதை உறுதிபடுத்துவது போல உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை காரணமாக அவர் உடல் நலம் தேறி வந்தார்.

அவர் எப்போது வீடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு தோன்றிய நிலையில் திடீரென அவர் மரணம் அடைந்துள்ளார். ஒரே நாளில் எப்படி இந்த தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது என்பது அ.தி.மு.க.வினரிடம் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது.

எப்படி இந்த சோக முடிவு ஏற்பட்டது? 2 நாட்களுக்குப் பிறகு தற்போது அது பற்றிய தகவல்கள் வெளியில் வந்துள்ளன.

செப்டம்பர் 22-ந்தேதி இரவு ஜெயலலிதாவுக்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட போது, அவரது உடல்நிலை பயப்படும்படியாக இருந்தது. என்றாலும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து அவரை சற்று தேற வைத்தனர்.

அவரது சுவாசம் சீரான நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதயம், நுரையீரல் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு டாக்டர்கள் வந்து சிகிச்சையை மேம்படுத்தினார்கள். இதனால் அவர் உடல் நலம் சிறப்பான முன்னேற்றத்தைப் பெற்றது.

இந்த நிலையில் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே மற்றும் சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்ட்கள் அளித்த சிகிச்சை ஜெயலலிதாவை நன்றாக குணம் அடைய செய்தது.

Share This Post

Post Comment