உடையில் குத்தும் வேலைப்பாடுடன் கூடிய ஊசி ரூ.17 லட்சத்துக்கு ஏலம்

ekuruvi-aiya8-X3

Garage-sale-brooch-sold-for-17-lakhs-at-US-auctionஅமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஒரு மையத்தில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய உடையில் குத்தும் ஒரு ஊசி ரூ.17 லட்சத்துக்கு ஏலம் போனது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஒரு மையத்தில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய உடையில் குத்தும் ஒரு ஊசி ஏலத்துக்கு வந்தது. 20-ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட அந்த ஊசி 500 ரூபாய் ஏலத் தொகையாக நியமிக்கப்பட்டது.

ஏலத்தின் போது அதன் விலை படிப்படியாக உயர்ந்தது. இறுதியில் அது ரூ.17 லட்சத்துக்கு ஏலம் போனது. அதற்கு காரணம் அந்த ஊசியில் மரகதம், சிவப்புக்கல் மற்றும் வைரக்கல் பதிக்கப்பட்டிருந்தது.

அதில் உள்ள வைரக்கல் 1.39 காரட்டும், கொலம்பியாவை சேர்ந்த மரகதக்கல் 1.50 காரட்டும், பர்மாவை சேர்ந்த சிவப்புக்கல் 0.60 காரட் எடையும் இருந்தன. ஆடையின் தரம் அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

Share This Post

Post Comment