தென்னாப்ரிக்காவில் அடுத்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு நடக்க இருப்பதாக அறிவிப்பு

BRICS-summit-in-2018பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் பங்கேற்கும் 10-வது உச்சி மாநாடு அடுத்த ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடைபெறும் என உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு, வணிகம் ஆகிய துறைகளில் கூட்டாக பங்களிப்பு அளிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பின் உச்சி மாநாடு கூடுகிறது.

நடப்பு ஆண்டுக்கான கூட்டம் சில மாதங்களுக்கு முன்னர் சீனாவில் நடைபெற்றது. இதில், மேற்கண்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், நியூயார்க் நகரில் உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், 2018-ம் ஆண்டுக்கான 10-வது உச்சி மாநாடு தென்னாப்ரிக்காவில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. மேலும், சர்வதேச தீவிரவாதத்தின் மீதான விரிவான உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வது என்றும் கூட்டாக முடிவு எடுக்கப்பட்டது.


Related News

 • சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து 22 பேர் சிக்கினர்
 • தைவானில் ரயில் தடம் புரண்டு விபத்து – 18 பேர் பலி
 • நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் காலமானார்
 • காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை
 • அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தலையீடு – ரஷிய பெண் மீது வழக்குப்பதிவு
 • ஜமால் கசோக்கி 2 மூத்த அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்- சவுதி அரேபியா ஒப்புதல்
 • பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு
 • பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கும் சோபியா ‘ரோபோ’
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *