8 பேர் கொண்ட குல்பலால் இரு சிறுமிகள் பாலியல் பலாத்காரம்

ekuruvi-aiya8-X3

andra_8_23விசாகப்பட்டணம் சிந்தாபாலே காவல் நிலையத்திற்கு உள்பட்ட டஜாங்கி பகுதியில் கொடூரச் சம்பவம் நடந்து உள்ளது என போலீஸ் தெரிவித்து உள்ளது.
டஜாங்கி என்ற பகுதியில் கடந்த 20-ம் தேதி திருவிழா நடைபெற்றது. இதற்கான கலைநிகழ்ச்சிகளை காண்பதற்காக அப்பகுதியை சேர்ந்த இரு சிறுமிகள் தங்களது நண்பர்களுடன் வந்திருந்தனர். அப்போது, இடியுடன், கனமழை பெய்ய ஆரம்பித்ததால் அவர்கள் அங்கு உள்ள பள்ளி கட்டிடத்தில் ஒதுங்கி உள்ளனர். அவர்கள் அங்கு ஒதுங்கியிருப்பதை கண்ட அப்பகுதியை சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதி மகன் தன்னுடைய நண்பர்களை அழைத்து உள்ளான். அவன், போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் அவனது நண்பர்கள் சிறுமிகளை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
சிறுமிகளுடன் விழாவை பார்க்க வந்த அவர்களுடைய நண்பர்களை அடித்து உதைத்து உள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களுடைய பெற்றோர்களிடம் சம்பவத்தை எடுத்து கூறிஉள்ளனர். இதனையடுத்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வழக்குப்பதிவு செய்த போலீஸ் இரு தனிப்படைகளை போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய இரு தனிப்படை அமைத்து உள்ளது. இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

Share This Post

Post Comment