ட்விட்டர் த்ரெட்ஸ்: புதிய அப்டேட் முழு விவரம்

ekuruvi-aiya8-X3

Twitterட்விட்டர் தளத்தில் புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வழக்கத்திற்கு மாற்றாக ஒரே சமயத்தில் இரண்டு ட்விட்களை மேற்கொள்ள முடியும். நீண்ட தகவல்களை ட்விட்டரில் பதிவிட இந்த அம்சம் பயன் தரும்.
த்ரெட்ஸ் (threads) என அழைக்கப்படும் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் சோதனை செய்யப்பட்டு வருவதாக ட்விட்டர் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன் மூலம் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. புதிய த்ரெட்ஸ் அம்சம் மூலம் வழக்கத்தை விட இருமடங்கு பெரிய ட்விட்களை போஸ்ட் செய்ய முடியும்.

ட்விட்ஸ்டார்ம் என்ற அம்சம் நீணட காலமாக சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டது. அந்த வகையில் ட்விட்டர் இணை நிறுவனர் மார்க் ஆண்டர்சன் அவ்வப்போது நீண்ட ட்விட்களை பதிவிடுவார். பின் இந்த அம்சத்திற்கான தேவை பயனர்களிடையே அதிகரித்த நிலையில் ட்விட்டரில் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த 140 வார்த்தைகள் இருமடங்கு அதிகரிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ட்விட்டர் த்ரெட்ஸ் அம்சம் மூலம் பயனர்கள் தங்களது கருத்துக்களை முன்பை விட இருமடங்கு அதிக வார்த்தைகளில் பதிவிட முடியும். ட்விட்டரில் தினமும் ஆயிரக்கணக்கான த்ரெட்கள் தினசரி அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ட்விட்டரில் முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட 280 வார்த்தைகள் என்ற அளவு மாற்றப்படாமல் புதிய அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ட்விட்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அம்சத்தை பயன்படுத்த ஒரு ட்விட் செய்ததும் கீழே காணப்படும் (+) குறியை கிளிக் செய்து தொடர்ச்சியான ட்விட் பதிவிட முடியும்.

ஒவ்வொரு த்ரெட் நிறைவு செய்ததும், ஸ்பேஸ் பார் தட்டினால் புதிய த்ரெட் கிடைக்கும். கணினியில் + குறியை பயன்படுத்தி புதிய த்ரெட்களில் கருத்துக்களை பதிவிட முடியும். அந்த வகையில் தொடர்ச்சியாக 25 முறை புதிய த்ரெட்களை உருவாக்க முடியும். இதை தொடர்ந்து பயன்பாடுகளுக்கு ஏற்ப இந்த அம்சம் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அம்சத்திற்கான அப்டேட் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் கணினிகளில் வழங்கும் பணிகள் துவங்கியுள்ள நிலையில் ஒரு வார காலத்தில் அனைவருக்கும் இந்த அம்சம் வழங்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment