தூத்துக்குடியில் கனமழை – பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

ekuruvi-aiya8-X3

rain14இந்திய பெருங்கடல் பகுதியில் குமரிக்கு தெற்கே, மாலத்தீவு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று லட்சத்தீவை நோக்கி நகரும்.
இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் 14-ம் தேதி மற்றும் 15-ந் தேதி அநேக இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு இல்லாத பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தும்.  தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்கள் வழக்கம் போல் தேர்வு மையங்களுக்கு செல்வார்கள்.

Share This Post

Post Comment