தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் – ஆட்சியர் ஊரில் இல்லாமல் எங்கு சென்றார் ? நீதிபதிகள் சரமாரி கேள்வி

Tuticorin-Gunfireதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் 100வது நாள் அன்று கலவரம் ஏற்பட்டது. இதில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்று வருகிறது. அத்துடன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன
தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவத்தில் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட துப்பாக்கிச்சூடு தொடர்பாக 15 வழக்குளை ஒன்றாக சேர்த்து  ஐகோர்ட் மதுரை கிளையில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எடுத்த நடவடிக்கைகள் என்ன? துப்பாக்கிச்சூட்டில் என்ன வகையான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது? துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றபோது ஆட்சியர் ஊரில் இல்லாமல் எங்கு சென்றார் ? என இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் சரமாரி கேள்விகளை கேட்டனர்.
 மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை 18ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவும், மேலும் 99 நாட்கள் நடந்த போராட்டம் பற்றிய உளவுத்துறை அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.





Related News

  • அரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்
  • அய்யப்பன் ஆசிர்வாதமே காரணம் – சபரிமலை தந்திரி
  • நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி
  • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
  • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
  • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
  • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *