துருக்கி 3 முன்னாள் தூதர்களை கைது செய்தது

ekuruvi-aiya8-X3

Turkey 12ஆட்சி கவிழ்ப்பு தொடர்பாக, முன்னாள் அதிபர் அப்துல்லா குல்லின் ஆலோசகர் உட்பட 3 முன்னாள் தூதர்களை அதிபர் எர்டோகன் தலைமையிலான துருக்கி அரசு கைது செய்துள்ளது.

துருக்கியில் அதிபர் எர்டோகன் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க ராணுவத்தின் ஒரு பிரிவினர் கடந்த மாதம்(ஜூலை) நடத்திய ராணுவ புரட்சியை பொதுமக்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 265 பேர் உயிரிழந்தனர். 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 2,800 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆட்சி கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டாலும், துருக்கி அரசு தொடர்ந்து கைது நடவடிக்கையையும், ஆய்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஆட்சி கவிழ்ப்பு தொடர்பாக, முன்னாள் அதிபர் அப்துல்லா குல்லின் ஆலோசகர் உட்பட 3 முன்னாள் தூதர்களை துருக்கி அரசு கைது செய்துள்ளது.
ஆளும் நீதி மற்றும் வளர்ச்சி கட்சியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது, ஆட்சி கவிழ்ப்பு விவகாரத்தில் இதுவே முதல் முறையாகும்.

மூவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.

Share This Post

Post Comment