இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- இலங்கை உட்பட 28நாடுகளில் சுனாமி எச்சரிக்கை!
Apr 11 2012 07:42:54

 இந்தோனேசியா சுமத்திரா தீவை அண்டிய அச்சே மாநிலத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து இலங்கை உட்பட 28நாடுகளில் ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன் தாக்கம் இலங்கை, இந்தியா உட்பட தென்கிழக்காசிய நாடுகளில் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் இந்தோனேசிய நேரப்படி இரவு 7மணிக்கு பசிபிக் கடலில் நிலத்துக்கடியில் 30 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.9 புள்ளியாக பதிவானதாக இந்தோனேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகும்.

இதையடுத்து அந்தமான் நிகோபார் தீவுகள் உட்பட இந்தியாவின் கிழக்குப் பகுதிகள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஒஸ்ரேலியா, தாய்லாந்து உள்பட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இலங்கையின் பல பாகங்களிலும் உணரப்பட்டதாகவும், கட்டிடங்கள் குலுங்கியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் கரையோரப்பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பை அண்டிய கடற்பிரதேசம் அலைகள் கொந்தளிப்பாக காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கரையோர பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு கொழும்பில் உள்ள வானொலி, மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகி கொண்டிருப்பதாக நமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் நிலநடுக்கத்தால் சென்னை, மதுரை, பெங்களூர், கொல்கத்தா, கொச்சி, குவஹாத்தி உள்பட பல்வேறு நகர்களிலும் கட்டடங்கள் மிக பயங்கரமாக நடுங்கியதால் மக்கள் பீதியில் கட்டடங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இன்றைய நிலநடுக்கத்தை இலங்கை, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசியாவின் பல நாடுகளிலும் மக்கள் உணர்ந்துள்ளனர்.

 
Sep 11 2012 08:13:30 [Tamil]
தமிழர்களின் தெய்வமாகிய நல்லூர் கந்தன் திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி 25 நாட்கள் சீரும் சிறப்பமுமாக நடந்து முடிந்தது. விழாவின் முக்கிய நாளான 24 ஆம் நாள் தேர் திருவிழாவின் போது பக்தர்கள் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க நல்லூர்க்கந்தன் தேரில் எழுந்தருளி வலம் வந்தார்.

Read More >

Sep 10 2012 11:11:39 [Tamil]

Read More >

Sep 09 2012 09:54:52 [Tamil]
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் பின்னராக ஆட்சியமைப்பு குறித்த பேரம்பேசல்களில் ஐ.ம.சு.கூ, த.தே.கூ மற்றும் மு.கா உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற நிலையில்; இந்த தேர்தலில் 'பிள்ளையானின்' வகிபாகம் குறித்து சில பார்வைகள்.

Read More >

Sep 08 2012 13:39:39 [Tamil]
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 14 ஆசனங்களும்

Read More >

Sep 04 2012 10:36:38 [Tamil]
இலங்கையின் தலை சிறந்த விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டு உள்ளார் தர்சினி சிவலிங்கம். நாட்டின்

Read More >

Jul 26 2012 12:18:17 [Tamil]
அஜித் நடித்து வெளியாகியிருக்கும் பில்லா 2 திரைபடம் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்ட நாளில், அஜித்தின் அட்டை உருவத்திற்கு பாலூற்றி;க் களித்திருக்கின்றனர் யாழ்ப்பாண ரசிகர்கள்.

Read More >

Jul 07 2012 08:22:03 [Tamil]
தமிழகத்தின் ௭திர்ப்பினால் பயிற்சிகளை இடைநடுவில் நிறுத்தி இலங்கை விமானப்படையின் ஒன்பது அதிகாரிகளை திருப்பியனுப்ப இந்திய மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையானது கவலையளிக்கின்றுது. ௭ன்று

Read More >

Jul 07 2012 08:13:35 [Tamil]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் தமிழ் மக்களுக்கு அதிக அளவில் நன்மை செய்ய முடியும் என்று இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம்

Read More >

Jul 06 2012 07:56:16 [Tamil]
இரணைமடு குளத்தில் மீன்பிடி பிடிப்பதற்கு விமானப்படையினர் தடை விதித்துள்ளதால் இக்குளத்தில் மீன்பிடி தொழிலையே நம்பியிருக்கும் கிளிநொச்சி அழகாபுரி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரிதும்

Read More >

Jul 06 2012 07:51:19 [Tamil]
யாழ். உதயன் பத்திரிகை ஆசிரியர் பிரேம்நாத் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கவோ அது தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்கவோ முடியாத அளவிற்கு யாழ். நீதவான் கணேசராசாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்

Read More >