டிரம்ப் மருமகளுக்கு உடல் நலம் பாதிப்பு – பார்சலில் வந்தது ஆந்த்ராக்ஸ் விஷ கிருமியா?

vennisaஅமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பின் மூத்த மகன் டெனால்டு ஜூனியர் , இவரது மனைவி வெனிசா, மன்ஹாட்டன் நகரில் வசிக்கும் இவரது வீட்டிற்கு வந்த தபால் உறையை பிரித்து பா்த்த போது திடீரெ மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடன் அவரது தாயார் , வீட்டு வேலையாளர் என அடுத்தடுத்து பாதிக்கப்பட்டனர். உடனடியாக நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மர்ம உறையில் வந்தது ஆந்த்ராக்ஸ் எனப்படும் கொடிய விஷக்கிருமியை பரப்பும் பவுடராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.பாஸ்டன் நகரில் இருந்து அனுப்பி வைத்ததாக முத்திரையிடப்பட்டிருந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

Share This Post

Post Comment