அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ?

Facebook Cover V02

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் பரபரப்பாக இருக்கிறது. வெற்றி பெறும் வேட்பாளர் 270 எலெக்ட்டொரல் ஓட்டுகளைப் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், ட்ரம்ப் மற்றும் ஹிலரி மாறி மாறி முன்னணியில் வந்து கொண்டிருந்தனர். இப்போது ஹிலரி 210 ஓட்டுகளைப் பெற, ட்ரம்ப் 244 ஓட்டுகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறார்.

இன்னும் 102 தேர்தல் வாக்குகள்  பெற்றால் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்கெடுப்பில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் ; டொனால் டிரம்ப் முன்னிலையில்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நேற்றைய தினம் வாக்குபதிவுகளுடன் முடிவடையுள்ள நிலையில் பல மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால் டிரம்ப்  ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஹிலாரி கிளின்டனை விட 33 தேர்தல் வாக்குகளில் முன்னிலையில் உள்ளார்.

 

201611090828204758_Polls-closing-in-Trump-v-Clinton-duel-for-the-White-House_SECVPF.gif

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக்கட்சியின் டொனால்டு டிரம்ப் முன்னிலை||US-Election-Donald-Trump-Gains-In-Key-Battleground

உலக நாடுகள் அனைத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் கவர்ந்த அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது. 2 முறை தொடர்ந்து ஜனாதிபதியாக இருந்துவரும் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவு அடைவதால், அந்த நாட்டின் புதிய ஜனாதிபதியை (45-வது ஜனாதிபதி) தேர்ந்தெடுப்பதற்காக நடந்த இந்த தேர்தலில், அவரது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் (வயது 69), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் (70) இடையே கடும்போட்டி நிலவியது.
இருவரும் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தும், 3 முறை நேருக்கு நேர் விவாதம் செய்தும் அனல் பறந்த பிரசாரத்தில் ஈடுபட்டனர்.அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 538 தொகுதிகளில் 270-ல் வெற்றி பெறுபவர்கள் தான் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார்கள்.
இதனிடையே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கெண்டக்கி மற்றும் இந்தியானா மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஹிலாரி வெர்மாண்ட் மாகாணத்தை வென்றுள்ளார்.

தற்போது வரை டிரம் கையே ஓங்கியுள்ளது. ஹிலாரி கிளிண்டன் பின் தங்கியுள்ளதால் அமெரிக்க பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளன

2016-11-09_at_09-13-40

2016-11-09_at_09-13-05

Share This Post

Post Comment